பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 ஆத்மாவின் ராகங்கள் மனோபலத்தால் காரியங்களை நடத்திக் கொண்டிருந்தார்கள். உணவு, காய்கறி, பால், தயிர், நெய் எல்லாமே ஆசிரமத்திலே கிடைக்க வசதிகள் இருந்தன. உடைத் தேவையும் அங்கே சுழன்ற சர்க்காக்களின் மூலமும், தறிகளின் மூலமும் நிறைவேறியது. மதுரம் அவ்வளவு பெரிய நிலப்பரப்பையும் தோட்டத்தையும் மனமுவந்து அன்றைக்கு எழுதிக் கொடுத்திருக்காவிட்டால் இன்று இந்த ஆசிரமமே உருவாகியிருக்காது என்பதை மனப்பூர்வமாக உணரும் போதெல்லாம் அவன் இதயத்தில் நன்றியும் கண்களில் நீரும் சுரந்தன. மாகாண மந்திரி களாயிருந்த தேசபக்தர்கள் உதவுவதாக வாக்களித் திருந்தார்கள். r

அவனுக்கும் பொதுக் காரியங்களுக்கும் வேண்டிய எல்லா உபகாரங்களையும் செய்துவிட்டுப் பதிலுக்கு ஒரு நன்மையையும் அநுபவிக்காமல் போய்விட்டவளை எண்ணியபோது மட்டும் மனம் உள்ளேயே குமுறி ஊமையாய் அழுதது. அந்த ஆசிரமத்தையே மதுரத்தின் நினைவாகப் பாவித்தான். அவன். -

தமிழ்நாட்டின் தலைவர்கள், பாரத நாட்டின் பல பகுதியிலிருந்தும் வந்த தேசபக்தர்கள், எல்லாரும் ஆசிரமத்துக்கு வந்து பார்த்து மகிழ்ச்சியோடு அதைப் பாராட்டத் தொடங்கினர். பத்திரிகைகளில் ஆசிரமத்தைப் பற்றிய கட்டுரைகள் ராஜாராமன் என்கிற தனி ஒரு காந்தீயவாதியின் சாதனை இது என்று புகழ்ந்து வெளிவரலாயின. அவனை இத்தனை பெரிய சாதனைகள் புரிய வைத்த சக்தி எது என்பது அவனுக்கும் அவனுடைய அத்யந்த நண்பர்களுக்கும் மட்டுமே தெரிந்திருந்தது. எந்தப் பவித்திரமான இதயத்தின் பிரியத்தால் அத்தனை விரைவாக நாடு முழுவதும் கொண்டாடிப் பிரியம் செலுத்தப்படும் அந்தஸ்தை அடைந்தானோ, அந்தப் பிரியத்துக்குரியவள் அவனுக்காகத் தவித்து உருகி உருகியே மாய்ந்தாள் என்ற நினைவு வரும்போது சோகம் அவனை இருளாய்க் கவ்வி மூடியது. - -