240 ஆத்மாவின் ராகங்கள் ஒருத்தி இருக்கிற வரை நீங்கள் சாமியாராக முடியாது: என்றாள் அவள். இப்போது அவள் இல்லை. ஆகவே, அந்த விரதத்தை முடிக்க வேண்டிய அவசியமும் அவனுக்கு இல்லை. வேத காலத்துக்கு மட்டும்தானா முனிவர்கள் தேவை? நவீன இந்தியாவுக்கும், சுயநலத்தைத் துறந்து பல கோடி மக்களுக்காகத் தங்களை வருத்திக் கொண்டு தவம் புரியும் பல்லாயிரம் சத்தியாக்கிரக முனிவர்கள் தேவைதான். அவர்களின் முதல் அவதாரமாகவே காந்தி தோன்றியிருக்கிறார். காந்தியைத் தொடர்ந்து இன்னும் பல்லாயிரம் புதிய முனிவர்கள் தேசத்துக்கு வேண்டும். சங்கரரின் அத்வைதம் போல், ராமாநுஜரின் விசிஷ் டாத்வைதம் போல் காந்தியம் நாளைய வாழ்நாளுக்கு ஒர் அகில இந்திய ஆசாரமாக அமைய வேண்டும். அந்த ஆசாரத்தைப் பரப்பும் வாரிசுகளில் ஒருவனாக நான் இருப்பேன் என்று சுதந்திர தினத்தன்று நீண்ட நேர மனவேதனைக்குப் பின் தனக்குள் பிரதிக்ஞை செய்து கொண்டான் ராஜாராமன். . -
k × k
இந்தியாவின் கடைசி வைஸ்ராயாக வந்திருந்த லார்டு மவுன்ட்பேட்டனே இந்திய மக்களின் விருப்பப்படி கடைசி கவர்னர் ஜெனரலாகப் பதவி ஏற்றார். அதே சமயம் ஜின்னா பாகிஸ்தானின் கவர்னர் ஜெனரலானார். ஜவஹர்லால் நேருவைப் பிரதமாராகக் கொண்ட மந்திரிசபை அமைந்தது. சில மாகாணங்கள் நீங்கலாக மற்ற மாகாணங்களுக்குக் கவர்னர்கள் நியமிக்கப் பட்டார்கள்.
இந்து-முஸ்லிம் கலவரங்கள் மீண்டும் தலையெடுக்கவே மகாத்மா கல்கத்தாவில் உண்ணாவிரதம் தொடங்கினார். பலருடைய அன்பான வேண்டுகோளுக்கு இணங்கி, எழுபத்துமூன்று மணி நேரத்துக்குப்பின் உண்ணா விரதத்தைக் கைவிட்டார் மகாத்மா. அடுத்த வருடம் ஜனவரி மாதம் டில்லியிலே நடைபெற்ற கலவரத்தைத் கண்டித்து மகாத்மா மீண்டும் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.