பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1948 ஜனவரி முப்பதாந்தேதி டில்லியில் பிரார்த்தனைக் கூட்டத்துக்குப் போகும் போது காந்தி மகான் சுட்டுக் கொல்லப்பட்டார். ரேடியோவில் அஞ்சல் செய்து கொண்டிருந்த திருவையாறு தியாகராஜர் உற்சவ நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு இந்தப் பேரிடி போன்ற செய்தி அறிவிக்கப்பட்டது. அன்று டில்லியில் சூரியன் அஸ்தமிக்கும்போது சூழ்ந்த இருள் அதன்பின் பல நாள் வரை பாரத நாட்டில் நீடித்தது. செய்தியறிந்தபோது ராஜாராமன் மூர்ச்சையாகிவிட்டான். அன்று காலையில்தான் ஊரிலிருந்து திரும்பி வந்திருந்த பிருகதீஸ்வரன் ராஜாராமனை மூர்ச்சை தெளிவித்து ஆசுவாசப்படுத்தினார். ஒடையில் போய் மகாத்மாவுக்காக முழுகி எழுந்தார்கள் இருவரும். மறுநாள் காலை பிருகதீஸ்வரன் தேசபிதாவைத் தன் சொந்தப் பிதாவாக அங்கீகரித்துக் கொண்டு, அத்தனை காலம் வைத்திருந்த பாசத்தின் அடையாளமாக மகாத்மாவுக்குத் தர்ப்பணம் செய்து எள்ளும் தண்ணீரும் வாரி இறைத்தார். தண்ணீரால் அவர் அந்தத் தர்ப்பணத்தைச் செய்தார் என்பதைவிடக் கண்ணிரால் செய்தார் என்பதே பொருத்தமாயிருக்கும். ராஜாராமனும் தாய் தந்தைக்கே செய்தறியாத தர்ப்பணத்தை மகாத்மாவுக்காகச் செய்தான். முத்திருளப்பனும், குருசாமியும் தலையை மொட்டை யடித்துக் கொண்டார்கள்.

தொடர்ந்து ஆசிரமத்தில் காலையும், மாலையும், பிரார்த்தனைகளும், பஜனைகளும் நடந்தன. வைஷ்ணவ ஜனதோவும் ரகுபதி ராகவ' பாடலும் இடைவிடாமல் பல நாட்கள் ஒலித்துக் கொண்டிருந்தன. தேசம் நிலை கலங்கிப் போயிருந்தது. ஆன்ம பலத்தினாலும் தூய யோகியின் எளிமைக் கோலத்தாலும், பாரத சுதந்திர யுத்தத்துக்கு வழிகாட்டிய தந்தையின் மறைவு பல கோடி மக்களின்