பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 243 கண்களில் நீரைப் பெருக்கியது. மகாத்மாவின் வாழ்நாளில் அவர் உயிரோடு இருக்கும்போது பணியின் காரணமாகவும், தன்னடக்கத்தின் காரணமாகவும் செய்யத் தயங்கியிருந்த ஒரு காரியத்தை இப்போது ராஜாராமன் மனப்பூர்வமான பிரியத்தோடு செய்து கொண்டான். முன்பு ஹரிஜன நிதிக்காக மகாத்மா மதுரை வந்திருந்தபோது டி. எஸ்.எஸ். ராஜன் தன்னைக் கூப்பிட்டபடி காந்திராமன் என்றே தன் பெயரை மாற்றிக் கொண்டு கெஸ்ட்டுக்கும் அறிவித்து விட்டான் அவன். டி.எஸ்.எஸ். ராஜன் அன்று வாய் தடுமாறி அப்படி அழைத்தபோது, 'இப்படியே பேர் வச்சுக்கயேன்"- என்று அருகிலிருந்த வைத்தியநாதய்யர் செய்த ஆசீர்வாதமே இன்று பலித்ததாகக் கருதினான் அவன். காந்தியோடு இந்தியாவில் ஒரு மாபெரும் சகாப்தம் முடிந்துவிட்டதாகத் தோன்றியது அவனுக்கு. - .

★ ? . ★ ,★

தேர்தலில் நின்று வெற்றி பெற்றுச் சட்டசபையிலோ பார்லிமெண்டிலோ அவன் பணிபுரிய வேண்டும் என்று பின்னாளில் சகதலைவர்களும், தேசபக்தர்களும் அவனை எவ்வளவோ வற்புறுத்தினார்கள். அவன் தீர்மானமாக மறுத்துவிட்டான். ஆசிரமப் பணியே அவன் பணியாகியது.

'எல்லாருமே பதவிகளிலும், நாற்காலிகளிலும் போய் அமர்ந்துவிட்டால், மகாத்மாவின் பணிகளைத் தொடரமுடியாது. பதினெட்டு வருஷ காலத்துக்கும் மேலாக இந்த மகாவிரதத்தில் நாங்கள் ஈடுபட்டோம். பயன் கிடைத்துவிட்டது. கட்சிப் பூசல்களிலும், நாற்காலியைப் பிடிக்கும் பரபரப்பிலும் நமது விரதம் பங்கப்பட்டுப் போய்விடக் கூடாதென்றுதான் பயப்படுகிறேன் நான். சுதந்திரம் பெறுவதற்கு முன் நம் எல்லாருக்கும் அடைய வேண்டிய இலட்சியம் சுதந்திரம் என்ற ஒன்றாக மட்டுமே இருந்தது. சுதந்திரம் என் பிறப்புரிமை - என்று திலகர் கொடுத்த குரலையே நம் எல்லாருடைய இதயங்களும் எதிரொலித்தன. அடைய வேண்டியதை அடைந்தபின்