பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/249

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நா. பார்த்தசாரதி 247 நிற்பது போன்ற வேதனையைச் சில வேளைகளில் உணர்ந்து, தனிமையில் கண்ணிர் விட்டான் அவன்.

ரத்தினவேல் பத்தர் போய்விட்டார். சிரித்துக் கொண்டே பெண்ணைக் காப்பாற்றச் சொல்லி வேண்டிய மதுரத்தின் தாய் போய்விட்டார். மதுரமும் போய்விட்டாள் அவனைப் போன்ற பல்லாயிரம் இளைஞர்களை இந்தத் தேசபக்தி என்ற மகாவிரதத்துக்கு அழைத்த மகாத்மாவும் போய்விட்டார். வேலூர் சிறையில் அறிமுகமான நாளிலிருந்து குருவாகவும், நண்பராகவும் உடனிருந்து உதவிய பிருகதீஸ்வரன் போய்விட்டார். மனித ஜாதியே அழிந்தபின் மீதமுள்ள மயான பூமியில் தனியே இருப்பது போலிருந்தது அவனுக்கு. துயரத்தை மறக்கவும், தன்மேல் அன்பு செலுத்தியவர்களின் பிரியத்தை எல்லாம் பகிர்ந்து, தான் பிறர் மேல் அன்பு செலுத்தவும் சுயநலமற்ற சேவைகளைச் செய்யும் ஒரு புதிய காலத்துத் தவமுனிவனாக மாறினான் அவன். .

★ x 大

பாரதநாடு பரிபூரணக் குடியரசாக உருப்பெற்றதன் பின் நாட்டில் ஒவ்வொன்றாக வருடங்கள் நகர்ந்தன. நாட்டின் தேர்தல்களும் புதிய புதிய மந்திரி சபைகளும் மாறி மாறி வந்தன. சுதந்திரத்துக்காகப் போராடிய இந்தியாவில் ஒரே ஒர் இயக்கம் தான் இருந்தது. ஒரே ஒரு நோக்கம்தான் இருந்தது. நாட்டுக்கு வந்த சுதந்திரம் அரசியலில் சிந்திக்கும் உரிமையையும் கருத்து வேறுபடும் உரிமையையும் அளித்தது. அகில இந்திய ரீதியிலும், ராஜ்யங்களிலும் பல்வேறு கட்சிகள் தோன்றின. பல்வேறு தலைவர்கள் வந்தார்கள். பல்வேறு இலட்சியங்களைக் கூறினார்கள். கொள்கைகளை உபதேசித்தார்கள். ஆன்மபலத்தில் நம்பிக்கையுள்ள - மகாத்மாவைப் போன்ற அரசியல் சத்தியாக்கிரகி ஒருவரை மட்டும் மீண்டும் பார்க்கவே முடியாமலிருந்தது. அணைக்கட்டுகளும் பிரம்மாண்டமான தொழிற்சாலைகளும் உருவாயின. பள்ளிகளும், கல்லூரி, களும், பல்கலைக்கழகங்களும் பெருகின. மொழிவாரியாக