நா. பார்த்தசாரதி 249 ஆசாரிய விநோபாபாவே ஒருவர் மட்டுமே மீதமிருப்பதாக அந்தச் சொற்பொழிவின்போது அவர் குறிப்பிட்டார். ஆன்மாவினால் வாழ முயலும் பரம்பரை போய்விட்டதோ என்று காந்திராமனைப் போன்றவர்கள் கவலைப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் விநோபாபாவேயின் சர்வோதயத் தத்துவங்களும் பூமிதான இயக்கமும் அவர் மனத்தைப் பெரிதும் மகிழச் செய்தன. தேசிய மகா விரதங்களைச் செய்யும் முனிவர்களின் கடைசிக் கொழுந்தாக விநோடாபாவே அவருக்குக் காட்சியளித்தார்.
காந்திராமன் மீண்டும் 1961 ஆம் ஆண்டின் தொடக்கத் தில் காந்தியச் சொற்பொழிவுகள் செய்யவும், நல்லெண்ணங்களைப் பரப்பவும், இலங்கையிலும் தென் கிழக்கு ஆசியாவிலும், பர்மாவிலும், ஆஸ்திரேலியா விலுமாக மூன்று மாத காலம் சுற்றுப் பயணம் செய்ய நேர்ந்தது. அந்தச் சுற்றுப் பிரயாணம் முடிந்ததும் சில மாதங்களில் அவருடைய அறுபதாண்டு நிறைவு விழா வந்து சேர்ந்தது. நாடு இருந்த நிலையில் விழாக்கள் கொண்டாடும் மன நிலையிலோ, மாலைகள் அணிந்து கொள்ளும் உற்சாகத்திலோ அவர் இல்லை. எவ்வளவோ மறுத்தும் கேளாமல் நண்பர்களும், அவரால் படித்து முன்னுக்கு வந்தவர்களும், தேசபக்தர்களும் சென்னையில் அந்த விழாவைப் பிரமாதமாக நடத்தி விட்டார்கள். அடுத்த மாதமே ஆசிரமத்துக்குத் திரும்பியதும், தம்மோடு ஆரம்ப முதல் இருந்து ஆசிரமத்துக்குப் பணிபுரியும் முத்திருளப்பனையும், குருசாமியையும் பாராட்டி அவர் ஒரு விழா நடத்தினார். அந்த விழாவில் தங்களைப் பாராட்டி அவர் மனம் விட்டுப் பேசிய பேச்சினால் முத்திருளப்பனும் குருசாமியும் மனம் நெகிழ்ந்து உருகினார்கள். ஆசிரமத்தின் ஒரு பிரேயர் ஹாலுக்குப் பிருகதீஸ்வரனின் பெயரை வைத்துப் பிருகதீஸ்வரன் ஹால்' என்று கூப்பிடச் செய்திருந்தார் அவர். மதுரத்தின் நினைவையோ தன் இதயத்துக்கு மட்டுமே சொந்தமான அந்தரங்கமாக வைத்துக் கொண்டுவிட்டார். - -
ஆரா - 17