பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/252

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


250 ஆத்மாவின் ராகங்கள் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் அவர் நீண்ட நாட்களாக எழுதி வந்த...'மை கன்டரி - பாஸ்ட் அண்ட் ப்ரெ ஸென்ட் - என்ற புத்தகத்தின் இரண்டு பாகங்களும் வெளியிடப்பட்டன. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பலருடைய பாராட்டுக்களைப் பெற்றது அந்த நூல். 'மிகவும் பயன்படத் தக்க நூலைப் பயன்பட வேண்டிய சமயத்தில் நாட்டுக்கு அளித்திருக்கிறீர்கள்' - என்று ஜவஹர்லால் ந்ேரு அதைப் படித்துவிட்டு எழுதியிருந்தார். காந்திராமன் அந்தப் பாராட்டில் உள்ளம் குளிர்ந்தார். அந்தப் புத்தகத்தில் இந்தியாவில் இரண்டு சகாப்தங்கள் அற்புதமாகச் சித்தரிக்கப்பட்டிருந்தன. சர்தார் படேலின் மறைவு வரை உள்ள காலம் அந்த நூலில் கூறப்பட்டிருந்தது. .

சத்திய சேவாசிரமத்தின் கடந்த காலத்தைச் சேர்ந்த வருடங்களில் எத்தனையோ பேர் படித்து வெளியேறிச் சமூகத்தில் கலந்து விட்டார்கள். காந்திராமன் அந்த ஆசிரமத்தில் பல எளிய திருமணங்களையும் நடத்தி வைத்தார். அவற்றில் சில மனம் விரும்பிச் செய்து கொண்ட அன்பின் அடிப்படையைக் கொண்ட கலப்பு மணங்கள். பலருக்கு வாழ்க்கை வழிகாட்டியாக அமையும் நட்பினரும், பழகியவர்களும், அன்பர்களும், அவரைச் சூழ்ந்திருந்த காலங்களில் சொந்த மனத்தின் துயரங்களை அவர் மறக்க முடிந்தது. வேலை கிடைக்காமல் கஷ்டப்பட்ட எத்தனையோ திறமையுள்ள இளைஞர்களுக்கு அவரால் வேலை கிடைத்தன. இளமையில் வழிதவறிய இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும், திருந்தவும் வாழவும் வாய்ப்புக் கிடைத்தது. அவருடைய சாந்தமயமான புன் சிரிப்பிலேயே திருந்தியவர்கள் பலர்; பேசிக் கேட்டுக் திருந்தியவர்கள் பலர்; கூட இருந்து ஆசிரம வாழ்வில் பழகிப் பழகிப் பண்பட்டவர்கள் சிலர். சத்திய சேவாசிரமத்தை எப்படி ஆக்க வேண்டுமென்று ஒரு காலத்தில் அவரும் பிருகதீஸ்வரனும் கனவு கண்டார்களோ அந்தக் கனவு இன்று நனவாகிவிட்டது. அவர் அந்தக் கனவு நனவாகியதை இருந்து பார்த்துக் கொண்டிருந்தார். பிருகதீஸ்வரனுக்குத்தான், பாவம் இதை இருந்து பார்க்கக்