பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/254

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


252 ஆத்மாவின் ராகங்கள் ராஜ்யத்துக்கும் தன் சுய நன்மைகளில் மட்டுமே பற்று விழுந்தது. வடக்கே உள்ளவர்களின் அவசர மனப்பான்மை பால் எல்லாம் குழப்பமாகி விட்டது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பும் தொடர்ந்து தாஷ்கண்ட் சந்திப்பும் நேர்ந்தது. ஆக்கிரமிப்பு வேளையில் மட்டும் மொழி பேதம், மாநில பேதங்களை மறந்து, அபூாவமாகவும் அவசரமாகவும் நாட்டில் ஒர் ஒற்றுமை உணர்வு தென்பட்டது. தாஷ்கண்டில் எதிர்பாராத விதமாக சாஸ்திரி மறைந்தார். நேருவின் மறைவை ஈடுசெய்வது போல வந்த தைரியசாலியும் மறையவே இந்தியாவின் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப் பட்டார்கள் பெரியவர்கள். காந்திராமன் மீண்டும் கலக்கம் அடைந்தார். -

மெல்ல மெல்ல நாட்டில் ஓர் அமைதியின்மை உருவாயிற்று. அறுபது வருஷங்களுக்கும் மேலாகக் கட்டிக்காத்து வளர்த்த தேசிய மகாவிரதம் இருபது வருஷங்களில் படிப் படியாகப் பலவீனமடைந்தது. பன்னூறு மகான்களின் எண்ணற்ற தியாகங்களை அஸ்திவாரம் போட்டுக் கட்டிய சுதந்திர மாளிகையில் தூசுகள் அடையத் தொடங்கியிருந்தன. அன்பும், கருணையும் சத்தியமுமாகிய சிறந்த மொழிகளின் பொருளை உணர்ந்த நாட்டில் பேசும் மொழிகளால் வேறுபாடுகள் பிறந்துவிட்டன. அரசியல் வாதிகளிடையே தியாக மனப்பான்மை போய்விட்டது. தேர்தலில் ஜயிப்பதும், ஜயித்தபின் உடனே அடுத்த தேர்தலில் ஜயிக்கும் வழி வகைகளை யோசிப்பதுமாக மாறிவிட்டார்கள். அவர்கள் வறுமையை, பசியை, அறியாமையை ஜயிக்க வேண்டுமென்று சுதந்திரம் பெறுமுன் இருந்த தாகம், சுதந்திரம் பெற்ற பின் தேர்தல்களில் ஜயிக்கும் வெறும் ஆசையாக மட்டுமே வந்து மீந்தது. பண முள்ளவர்களே தேர்தல்களில் நிற்க முடியுமென்றும் ஆயிற்று.

சத்திய சேவா ஆசிரமத்தின் ஒரு மூலையிலிருந்து செய்தித்தாள்களில் நாட்டு நடப்புக்களைப் படிக்கும் போதெல்லாம் கண்ணிர் வடித்தார் காந்திராமன். ஒரு நிச்சயமான நல்ல காரியம் அல்லது பொதுக்காரியம்