பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 ஆத்மாவின் ராகங்கள் அடுத்தவனைக் கொல்லும் சக்தி தேவை இல்லை. தானே சாவதற்குரிய மன உறுதிதான் தேவை' என்று எங்கள் மகாத்மா கூறிய உறுதி உனக்கு இன்று இருக்கிறது. நீ அறத்தினால் வெல்வாய் உன்னை எதிர்க்கும் மறமும், கொடுமைகளும் நிச்சயமாய் அழியும்...' -

இது பற்றிப் பத்திரிகைகளுக்கு அவர் ஒர் அறிக்கையும் விடுத்தார். மொழி விஷயத்தில் அவசர மனப்பான்மை காட்டாமல் தென்னிந்தியர்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்பளிக்குமாறு பிரதம மந்திரிக்கு ஒரு கடிதமும், வன்முறைகளில் இறங்குவதைத் தவிர்க்குமாறு மாணவர்களை வேண்டிப் பத்திரிகைகளுக்கு ஒர் அறிக்கையும் அனுப்பினார். அவரிடமிருந்து வெளி உலகுக்குக் கிடைத்த கடைசி உரைகள் இவைதான். இதற்குப் பின்பு அவர் அறிக்கைகள் விடவில்லை. பிரசங்கங்கள் செய்யவில்லை. அறிவுரைகள் கூறவில்லை.

அன்று மதுரத்தின் சிரார்த்த தினம். கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தினத்தன்று தவறாமல் நாக மங்கலம் போய்த் திரும்புவது அவர் வழக்கமாயிருந்திருக்கிறது. அன்றும் அதிகாலையிலேயே அவர் நாகமங்கலம் போயிருந்தார். பகல் முழுவதும் அங்கேயே இருந்துவிட்டு மாலையில் ஆசிரமம் திரும்பினார். திரும்பும் போது இருபது வருஷங்களுக்கும். மேலாகத் தாங்கிய சோகம் திடீரென்று கனப்பது போல் ஒர் உணர்வு அவர் உள்ளே உந்தியது. - -

ஆசிரமம் திரும்பியதும் - மேஜையில் மீதமிருந்த பைல்களில் குறிப்பு எழுதிக் கையொப்பமிட்டார். ஆசிரம நிர்வாக வேலைகளாக முத்திருளப்பனிடமும் குருசாமியிடமும் சிறிது நேரம் பேசினார். காரியதரிசி நாராயண் ராவைக் கூப்பிட்டு 'பெண்டிங் ஆக இருந்த கடிதங்களுக்குப் பதில் கூறி எழுதிக் கொள்ளச் செய்தார். அது முடிந்ததும் ஒர் அரை மணி நேரம் சர்க்காவில் நூல் நூற்றார். ஆசிரமத்துப் பையன் ஒருவன் அவரைப் பார்க்க வந்தான்.