பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 ஆத்மாவின் ராகங்கள் ஒலிகள் அவருடைய ஆத்மாவைத் தொட்டு அழைத்தன.

வீணைக்கும் அப்பால் மகாத்மாவின் படமும் - 'சத்தியாக்கிரகம் என்பது எல்லாக் காலத்துக்கும் பொருந்தி

வரக் கூடிய நியதி' என்ற வாக்கியமும் மங்கலாகத் தெரிந்தன.

பார்வை மங்கிக் கொண்டே வந்தது. சரீரம் மெதுவாவது

போல் இலேசாயிருந்தது. செவிகளில் ஒலித்த ராகங்களிலும்,

கண்களில் மங்கிய மகாத்மாவின் படத்திலுமாக இதயம்

மெல்ல மெல்லக் கரைந்தது.

எல்லையில்லாததோர் காட்டிடை - நள்

இருளென்றும் ஒளியென்றும் சொல்ல ஒணாததோர் மயக்கத்தே - இளம் சோகக்குயில் ஒன்றிசைக்கிறது - அதன் சோகம் முழுதும் தெரியுதிலை

சுவடு முழுதும் புரியுதிலை தொல்லைப் பழங் காலமுதலாய் - எனைத்

தேடித் தவித்த குரல் சொல்லைக் குழைத் தாளுங்குரல் ஒரு சோகம் முதிர்ந்து முதிர்ந்துறிப் பல்லாயிர மூழிகள் தொடர்ந்து

பாடிப் பசித்த குயிலின் குரல்.... என்று எப்போதோ - தனிமையும் சோகமும் உந்திப் பிறந்த அந்தக் கவிதை மெல்லிய தொனியில் காதருகே கேட்கிறது. இப்போது உண்மையில் இந்தக் குரலின் தொனியிலேயே ஒரு பசி தெரிகிறது. பல்லாயிரம் ஊழிகள் பாடிய பசி தெரிகிறது. இருளும் ஒளியும் புரியாத மயக்கத்தில் அக்குரல் வருகிற இடத்துக்குத் தேடிப் போக வேண்டும் போல் இருக்கிறது. போகத் தொடங்கிய பாதையோ முடிவில்லாததாயிருந்தது. எட்டாத தொலைவிலிருந்து கேட்கும் அந்தக் குரலின் பிறப்பிடம் வரை தேடிக்கொண்டு போகும்போதே அந்த அவசரத்தில் சரீரம் தவறி ஆன்மா நடந்து போகத் தொடங்குகிறது. ஆன்மாவின் யாத்திரை ஆரம்பமாகும் போதே கேட்கின்ற குரல் மிகமிக அருகில் வந்து விட்டது போலிருந்தது. இருளிலிருந்து ஒளிக்குப்