பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/261

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நா. பார்த்தசாரத 259 போவது புரிந்தது. துக்கத்திலிருந்து மகிழ்ச்சிக்குப் போவது தெரிந்து சோகமும் சுவடுகளும் புரிந்தன. தன்னைத் தேடும் குரல் எது என்றும் புரிந்தது; தெரிந்தது. கடைசியாகத் தெரிந்த உருவமும், ஒலித்த ராகங்களும், அளித்த புன்னகையும் சாந்தமும் மட்டுமே முகத்தில் அப்படியே பதிந்தன.

பத்துப் பதினைந்து நிமிஷங்களுக்குப்பின் விளக்குகளை அணைப்பதற்காக நாராயணராவ் அங்கே வந்த போது பெரியவர் இருளென்றும் ஒளியென்றும் புரியாத உலகிற்குப் போயிருந்தார். இருளிலிருந்து ஒளியை அடைந்திருந்தார். அவர் ஒளியை அடைந்த போது ஆசிரமம் இருண்டது; அழுதது; தவித்தது. பல நூறு குரல்கள் கதறின. கண்கள் நெகிழ்ந்தன.

★ ★ ★ 、★ ★

முத்திருளப்பன் தம்முடைய மூப்பையும், தளர்ச்சி யையும் பொருட்படுத்தாமல் அடிக்கடி உடனிருந்து பல விஷயங்களைக் கூறியதாலும் டைரிகளின் குறிப்புக்கள் ஒரளவு பெரியவரின் நினைவுகளையும், அவ்வப்போது கருதிய கருத்துக்களையும் அறிந்ததாலும், என்னால் முடிந்த வரை இந்தக் கதையை எழுதிவிட்டேன். எழுதி முடிந்ததும் நாராயணராவும், குருசாமியும் இதைப் படித்துப் பார்த்துச் சில திருத்தங்களைச் சொன்னார்கள். அந்தத் திருத்தங்களையும் செய்தாயிற்று. - -

சத்திய சேவாசிரமத்தை அமைக்கும்போதும், பின்னாலும், பெரியவர் காந்திராமனுக்கும் பிருகதீஸ் வரனுக்கும் கெடுதல்கள் பல செய்த சிலரைப் பற்றிக் கதையில் எழுதியிருந்தேன். முத்திருளப்பன் அப்பகுதிகளை நீக்கிவிடுமாறு வேண்டினார்.

'அவன் கருணையும், அன்புமே பெருக வாழ்ந்தவன். அவனுடைய கதையில் கெட்டவர்களைத் தூற்றுவதைக் கூட அவன் விரும்பமாட்டான். தவிரவும் ஒரு சகாப்தத்தின் தியாகிகள் அனைவரும் அவர்கள் மகாவிரதத்தை