26 ஆத்மாவின் ராகங்கள் ராஜாராமன். பழநியாண்டியும், சுந்தரராஜனும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். சுந்தரராஜன் தான் முதலில் பதில் கூறினான்.
'ஃபாதர் ரொம்பக் கண்டிப்பா இருக்கார். ரெண்டு வருஷத்தை எப்படியாவது கடந்திட்டா, லா காலேஜிலே சேர்ந்துகிடலாம்ங்கிறார். அதான் பார்க்கிறேன்...'
சரி! நீ உருப்படவே போறதில்லே. வக்கீல் புதுத் தெருவிலேயே கிடந்து, அடிமையாகவே சாகத்தான் லாயக்கு. '
வக்கீலான தந்தைக்குப் பயந்து சுந்தரராஜன் பின்வாங்கியது ராஜாராமனுக்குக் கோபமூட்டியது. மற்றொருவனாகிய பழநியாண்டி பதில் சொல்லுமுன்பே அவன் பதில் என்னவாயிருக்கும் என்று ராஜாராமனே அநுமானித்து விட்டான். பழநியாண்டியின் தந்தை பழுத்த ஜஸ்டிஸ் கட்சி ஆள். டாக்டர் நாயரைத் தெய்வமாக நினைத்து வெள்ளைக்காரனின் துதி பாடிக் கொண்டிருப்பவர். பழநியாண்டியும் தனக்குத் துணை வரமாட்டான் என்பது ராஜாராமனுக்குப் புரிந்து விட்டது. ஆனால் அதற்காகத் தன் முடிவை மாற்றிக் கொள்ள அவன் தயாராயில்லை.
சுந்தரராஜன் வக்கீலாகப் போகிறான். உங்கப்பாவோ 'ஸர் பட்டத்துக்குப் பழி கிடக்கிறார். பையன் தேசப் போராட்டத்துக்குப் போறது நிச்சயமாக அவருக்குப் பிடிக்காது. என்ன, பழநியாண்டி, நான் சொல்றது சரிதானே?"
நான் இங்கே வர்ரது போறதுகூட எங்கப்பாவுக்குத் தெரியாது. - என்று பழநியாண்டி பயந்து கொண்டே ஆரம்பித்த போது ராஜாராமனுக்கு மேலும் கோபம் வந்தது. -