பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 27 தெரியாதா, ரொம்ப நல்லது! நீங்க ரெண்டு பேரும் வீட்டுக்குப் போய், வேஷ்டியை அவிழ்த்துப் போட்டு விட்டுச் சேலை கட்டிண்டு காலேஜுக்குப் போங்கடா. வேஷ்டி ஆம்பிளைகளோட சின்னம். நீங்க அதைக் கட்டிக்கிறது. அதுக்கு மரியாதையில்லே. ராஜாராமனுடைய கோபத்தைக் கண்டு நண்பர்கள் ஒன்றும் பேசத் தோன்றாமல் உட்கார்ந்திருந்தனர். சிறிது நேரத்தில் நேரமாகிறதென்று சொல்லிக்கொண்டே சுந்தரராஜனும், பழநியாண்டியும் மெல்ல வீட்டுக்கு நழுவினார்கள். முத்திருளப்பனும், குருசாமியும் ராஜாராமன் எப்படிச் செய்யச் சொன்னானோ அப்படிச் செய்யத் தயாராயிருந்தார்கள். வீட்டுக்குத் திரும்ப நேரமில்லா விட்டால் அங்கேயே அந்த ஒரே பாயில் ராஜாராமனோடு படுத்துத் தூங்கக் கூடியவர்கள் அவர்கள். அது ராஜாராமனுக்கும் நன்றாகத் தெரியும். அதனால் தான் அவன் அவர்களை ஒன்றும் கேட்கவில்லை:

சுந்தரராஜனும் பழநியாண்டியும் புறப்பட்டுப் போனபின் அவர்கள் மூவரும் தாங்கள் செய்ய வேண்டிய காரியங்களுக்குத் திட்டமிடத் தொடங்கினார்கள், அன்னக்குழி மண்டபத்துச் சந்தில் தன்னுடைய வீட்டுக்கு முன்புறமிருந்த அறையிலேயே திலகர் தேசிய வாசக சாலையை நடத்தி வந்த ராஜாராமன், அந்த வீட்டுக்காரர் இந்த வாசக சாலையில் நள்ளிரவிலும் ஆட்கள் கூடுவது, வந்தே மாதரம் பாடுவது போன்றவற்றால் கோபப்பட்டுக் காலி செய்யச் சொன்னதால், வடக்குச் சித்திரை வீதி மாடிக்கு மாற்றியிருந்தான். இடம் மாற்றிச் சில நாட்களே ஆகின்றன. கீழேயும், பக்கத்திலும் குடியிருப்பு வீடுகள் இல்லாததால் வடக்குச் சித்திரை வீதி மாடியில் எந்த நேரத்திலும் நண்பர்கள் கூடிப் பேச வசதியாயிருந்தது. மாடிப்படியேறுகிற இடத்தில் கீழே தங்கம் - வெள்ளிப் பூச்சு வேலை செய்த ஒரு கில்ட் ஷாப் இருந்தது. கில்ட்-ஷாப்காரர் ரத்தினவேல் பத்தர் ஒரு காந்தி பக்தர். அவர் தான் இந்த இடத்தை ராஜாராமனுக்குச் சொன்னவர். மாடிப்படிப் பாதை தனியே நேராகத் தெருவுக்கு இறங்கி விடுவதால், இந்தப் புது