பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 29 சாமியிடமும் முத்திருளப்பனிடமும் அநுபவ நிதானம் இருந்தது. - - -

'நாடு முழுவதும் தலைவர்களும் தேசபக்தர்களும் எதையாவது சாதனை செய்து கைதாகிக் கொண்டிருக்கிற சமயத்திலே நாம மட்டும் வாசகசாலையில் உட்கார்ந்து பேப்பர் படிச்சிட்டு வம்பு பேசிக் கொண்டிருக்கிறதிலே பிரயோசனமில்லை' - என்று ராஜாராமன் கடைசித் தடவையாக வற்புறுத்தியபோது ஃபண்டாபீஸ் மணி நாலடித்தது.

நாளை ஒரு முடிவு எடுப்போம் ' என்று குருசாமி சொல்லும் போதே போட்டி போட்டுக் கொண்டு வார்த்தைகளைத் தடுத்தது கொட்டாவி. . . . . . .

அவர்களும் அங்கேயே படுப்பார்கள் என்ற எண்ணத்தில் பாயை உதறி விரிக்கத் தொடங்கினான் ராஜாராமன். முத்திருளப்பன் புறப்படத் தயாராகி விட்டார்.

'இப்பவே மணி நாலாச்சு, நாங்க பேசிக்கிட்டே நடந்து போகச் சரியாயிருக்கும். இங்கே படுத்தா நேரந் தெரியாமத் தூங்கிடுவோம். குருசாமிக்குக் காலைல கடை தெறக்கணும். எனக்கு ஸ்கூல் லீவுன்னாலும் ஹெட்மாஸ்டர் வரச் சொல்லியிருக்காரு. நீயும் வீட்டுக்குப் போயிடேன், ராஜா. உனக்கு எங்களைவிடப் பக்கம் தானே?

'இல்லை, நீங்க வேணும்னா போங்க. எங்க வீட்டு ஒனர் ஒரு முசுடு, ராத்திரியிலே சத்தம் போடறோம்னு வாசகசாலையையே கிளப்பி விட்டவன். இப்ப வீட்டையே காலி பண்ணும்பான். நான் காலையிலேயே போய்க்கறேன்என்று நண்பர்களுக்கு விடை கொடுத்துவிட்டுக் கதவைத் தாழிட்டான் ராஜாராமன். . .

மாடி ஒட்டுச் சார்ப்பு. மாதமோ மே மாதம் உள்ளே வெக்கை பொறுக்க முடியவில்லை. தூங்க முடியாது போலிருந்தது. நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தவரை பேச்சு