பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/32

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 ஆத்மாவின் ராகங்கள் சுவாரஸ்யத்தில் வெக்கை தெரியவில்லை. ராஜாராமன் பாயைச் சுருட்டிக் கொண்டு மொட்டை மாடியில் பாய் விரித்துப் படுத்தான். அங்கிருந்த முற்றத்தில் அவன் கால் நீட்டிய போது சுரில் இடித்தது. படுத்த சிறிது நேரத்திலேயே தூங்கிவிட்டான் அவன். நீட்ட இடமில்லாததால் தூக்கத்தில் மிகக் குறைந்த உயரமுள்ள விளிம்புச் சுவரில் இரண்டு கால்களையும் தூக்கிப்போட வேண்டியதாயிற்று. சுவரின் மறுபுறமிருந்து பார்த்தால் இரண்டு தாமரைகள் பூத்துச் சுவர் விளிம்பில் கிடப்பதுபோல அந்தக் கால்களின் உட்புறங்கள் தெரிந்தன.

★ Yk ★ 大 大

கால்களில் சில்லென்று ஏதோ வந்து விழுந்ததை உணர்ந்தபோது அவன் மறுபடி கண் விழித்தான். காலில் வந்து விழுந்த பொருள் உறுத்தவில்லை. மிருது வாயிருந்ததுடன் சுகமாகவும் இருந்தது. மனோகரமான நறுமணத்தை அவன் நாசி உணரச் செய்தது. அந்தப் பொருள், கண்விழித்துப் பார்த்தால் இலேசாக வாடிய ஒரு கொத்து மல்லிகைச் சரம் சர்ப்பம் போல் சுருண்டு அவன் கால்களில் கிடந்தது. அரகஜா, ஜவ்வாது, புனுகு சந்தன வாசனையும் அந்தப் பூ வாசனையோடு கலந்திருந்தது. அந்த வாசனைகள் அவனைக் கிறங்க அடித்தன. பக்கத்து வீட்டு மாடியிலிருந்து யாரோ சன்னல் வழியே வீசி எறிந்திருக்க வேண்டும். பக்கத்து வீடு யாருடையாதாயிருக்கும் என்று அநுமானிக்க முயன்று அந்த அநுமானம் இலேசாக நினைவில் பிடிபட்டபோது அந்தப் பூவைக் காலால் உதைக்க எண்ணி, பூக்களை மிதிக்க வேண்டாம், என்ற இங்கிதமான நுண்ணுணர்வோடு கால்களிலிருந்து அதைக் கீழே தரையில் நழுவவிட்டான் அவன். கிழக்கே வானம் வெளுத்திருந்தது. பூ எந்த ஜன்னலிலிருந்து வந்து விழுந்ததோ, அந்த ஜன்னல் வழியே வீணையில் யாரோ பூபாளம் வாசிக்கத் தொடங்கும் ஒலி மெல்ல எழுந்தது. அவன் பாயைச் சுருட்டிக் கொண்டு உள்ளே வந்தான்.