பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 31

அந்த மல்லிகைப் பூவின் வாசனை இன்னும் கால்களிலிருந்து போகவில்லை. உள்ளே பெரிதாக மாட்டியிருந்த திலகர், காந்தி படங்கள் அவன் பார்வையில் பட்டதும்,

'அப்பனே! உன்னுடைய தேசம் விடுதலை யடைகிறவரை கூட நீ சுதந்திரமாக இரசிக்க முடியாது" - என்று அந்தப் படங்களிலிருந்தவர்களின் பார்வை அவனை எச்சரிப்பது போலிருந்தது. மாடிக் கதவைத் திறந்து வாசக சாலைக்காகப் போடப்பட்டிருந்த பத்திரிகைகளை எடுத்தான். சென்னையிலும், மதுரையிலும், திருச்சியிலும் திருநெல்வேலியிலுமாக மேலும் பல சத்தியாக்கிரகிகள் கைதாகியிருந்தார்கள். தேசத்தின் நலனில் அக்கறையுள்ள பலர் தொடர்ந்து கைதாகிச் சிறைக்குப் போய்க் கொண்டிருக்கும்போது தான் மட்டும் வெளியே இருப்பது பாவ மென்று தோன்றியது அந்த இளைஞனுக்கு. வாசக சாலையைப் பூட்டிக் கொண்டு அவன் கீழே இறங்கிய போது கில்ட் கடைப் பத்தர், கடையைத் திறந்து கொண்டிருந்தார். வாசகசாலைச் சாவியைக் கொடுக்க அவரிடம் போன போது,

'பின் பக்கம் மாடிவீடு யாரோடது; தெரியலியே2:1 - என்று கொஞ்சம் தெரிந்தும் தெரியாமலுமிருந்த சந்தேகத்துடனேயே அவரைக் கேட்டான்.

'இதென்ன கேள்வி தம்பி பின்பக்கம் ஒண்ணா நம்பர்ச் சந்துங்கிறது தெரியுமில்லே?" - என்று சொல்லிவிட்டுச் சிரித்தார் பத்தர். ராஜாராமனும் புரிந்து விட்டாற் போலப் பதிலுக்குச் சிரித்தான்.

'தெருப் பூராவுமே கந்தர்வ லோகம்கிறது ஊரறிஞ்ச விஷயமாச்சே? ஏன்? என்ன ஆச்சு 9' - -

"ஒண்னுமில்லே சும்மா தெரிஞ்சுக்கத்தான் கேட்டேன்."

'அங்கே நீங்க தெரிஞ்சுக்கிறதுக்கு எதுவுமே இல்லை, தம்பீ.' -