பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 33 அதனால் அது ஒன்றை மட்டும் அம்மாவிடம் கண்டிப்பாக மறுத்து வந்தான் அவன். ஏ.வைத்தியநாதய்யர், ஜார்ஜ் ஜோசப் போன்ற உள்ளூர்த் தலைவர்களின் ஆசியும் அவனுக்குக் கிடைத்திருந்தது. சீநிவாசவரதன் அவனுக்கு ஒரு பாரதி பாடல் புத்தகத்தை அன்பளிப்பாகக் கொடுத்திருந்தார். மூன்று வருஷங்களுக்கு முன் மதுரையின் வீதிகளில் தேச பக்தர் சோமயாஜுலு நடத்திய பட்டாக்கத்தி ஊர்வலத்தின் போது, இளைஞனாயிருந்த அவனைப் பலர் தடுத்தும் கேளாமல் அவனும் கூடப் போயிருந்தான். ஜெனரல் அவாரி நாகபுரியில் நடத்திய கொடி ஏந்திய தேசபக்திப் படையின் வாள் ஊர்வலத்தின் எதிரொலியாக இந்தப் பட்டாக்கத்தி ஊர்வலம் மதுரையிலும் நடந்தது. சென்னையில் நடந்த சைமன் கமிஷன் எதிர்ப்பு ஊர்வலத்தில் கலந்து கொண்ட தேசபக்தர்களையும், பொது மக்களையும் இரவில் வீடு திரும்புகையில், அந்நியர்களின் கூலிப் பட்டாளமும், குண்டர்களும் அடித்து நொறுக்கியதைக் கண்டித்துத் தீரர் சத்தியமூர்த்தி - லார்டு வெல்லிங்டனை அறைகூவி முழங்கிய வீர வாசகங்களைப் பாராட்டி, அப்போது ஹைஸ்கூலில் படித்துக் கொண்டிருந்த ராஜாராமன் அவருக்கொரு கடிதம் எழுதினான்.

'பகலில் எங்கள் ஆட்சி நடக்கிறது. இரவிலோ குண்டர்கள் ஆட்சி நடக்கிறது! அப்படியானால் வெல்லிங்டனே உமது ஆட்சி எங்கே நடக்கிறது? எங்கே போயிற்று 9' - என்று. அந்த தீரர் கூறிய வாக்கியங்களை அவன் பாராட்டி எழுதிய கடிதத்துக்கு ஆசி கூறி, அவர் ஒரு சிறு பதில் எழுதியிருந்தார். அந்தப் பதில் இன்னும் அவனிடம் பத்திரமாக இருந்தது. மதுரையின் இந்த ஞாபகங்களையும் அநுபவங்களையும் விட்டுவிட்டு மேலுTர் போக அவனுக்குப் பிடிக்கவில்லை. மேலுரில் அவனுக்கு

வேண்டிய சூழ்நிலையே இல்லை. ;

ஜோசப் சாரைப் பார்த்துவிட்டு வரலாம் என்றுதான் அன்று காலை அவன் வெளியே புறப்பட்டிருந்தான். மேலுார்

<%-Дтгт – 3