பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 ஆத்மாவின் ராகங்கள்

போனாலோ, அங்கிருந்து திருவாதவூர் போய்த் திரும்ப மாலையாகிவிடும். அவனோ பசுமலை போக விரும்பினான்.

'மேலுருக்கு இன்னொரு நாள் போறேன், ' என்று தட்டிக்கழித்து விட்டான் அவன். தாய் முணுமுணுத்தாள்.

'வெளியே போறதுதான் போறே; திரும்ப எவ்வளவு நாழியாகுமோ? ஏதாவது சாப்பிட்டு விட்டுப் போ' என்று இலையைப் போட்டாள் அம்மா. கண்டிப்பையும் விட முடியாமல் பாசத்தையும் விட முடியாமல் தாய் படும் சிரமத்தை அவன் நன்றாக உணர்ந்திருந்தான். ஒற்றைக்கொரு பிள்ளை என்பதால் ரொம்ப நாள் வரை அவனைப் பிச்சை என்று தான் அவள் கூப்பிட்டுக் கொண்டிருந்தாள். அவன் காலேஜ் படிப்பு வயதுக்கு வந்ததும் தான், அவள் அப்படிக் கூப்பிடும் வழக்கமே நின்றது.

இரண்டு தோசை சாப்பிட்டதுமே அவன் இலையிலிருந்து எழுந்து விட்டான். -

'ஏண்டா, போறுமா?"

'சீக்கிரமா வந்துடுவேன். இது போறும். '

செய்யப்போகிற காரியங்களுக்கு உடனிருந்து உதவுகிற மாதிரி மனோதிடமுள்ள பத்திருபது பேர் அவனுக்குத் தேவைப்பட்டார்கள். ஒருவர் இரண்டு பேர் செய்வதனால் ஒரு மறியலோ, ஆர்ப்பாட்டமோ நிரக்காது என்பதை அவன் உணர்ந்திருந்தான். மறியலைத் தொடங்கு முன்பே தடயம் தெரிந்து போலீஸ் பிடித்துக் கொண்டு போய்விட்டால் மறியலே நடக்காது. பழநியாண்டியும், சுந்தரராஜனும் இனிமேல் வாசகசாலைப் பக்கம் தலைகாட்ட மாட்டார்கள் என்பது அவனுக்கு நிச்சயமாகப் புரிந்தது.

'வயதானவர்களில் பலர் அந்நிய அரசாங்கத்துக்குப் பயப்படுகிறவர்கள்; வயதாகாத இளைஞர்கள் அப்பாவுக்குப் பயப்படுகிறவர்கள். கடவுளே! இந்த தேசம் எப்படித் தான்