பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/41

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 39

அவன் கண் விழித்தபோது, நேற்றைப் போலவே இன்றும் காலில் பூச்சரம் வாடிக் கிடந்ததைப் பார்த்தான். தாங்க முடியாத கோபம் வந்தது அவனுக்கு, அந்தக் கோபத்தின் வேகத்தை வீணையின் நாதம் மட்டுப்படுத்த முயன்றாற்போல ஒலித்தது. அதே வாசனைகள். ஆனால், பூ மட்டும் இன்று பிச்சிப்பூ அதனால் முதல் நாள் மல்லிகையை விடக் கொஞ்சம் அதிகமாகவே வாடியிருந்தது இது.

பக்கத்து மாடியிலிருந்து விதம் விதமான பூக்களைச் சூடிக் கழித்து, விடிந்ததும் எறியும் அந்த உருவத்தைப் பார்க்கவும் கண்டிக்கவும் வேண்டும் போல் அவனுக்குத் தோன்றியது. அடுத்த கணமே, 'தொலையட்டும்; நமக்கேன் இந்த வம்பு? நாளை முதல் மொட்டை மாடியில் படுக்க வேண்டாம்; அல்லது வேறு பக்கமாகக் கால் நீட்டிப் படுக்கலாம்' - என்றெண்ணிய போது சகிப்புத் தன்மையுடன் விட்டு விடலாமென்றும் தோன்றியது. 'நாள் தவறாமல், வாசகசாலை மொட்டை மாடியில், சாந்தி முகூர்த்தம் கழித்த அறை முற்றம் போல் வாடிய பூக்கள் விழுந்து கிடந்தால், வருகிறவர்கள் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்?’ என்றெண்ணியபோது முடிவாகக் கோபமே விசுவரூபமெடுத்தது. •

பக்கத்து மாடியிலிருக்கும் பெயர் தெரியாத அந்த அப்சரஸை என்ன சொல்லி எப்படிச் சப்தம் போட்டு இரைந்து கூப்பிடுவதென்று தயங்கியபோது, இரு கைகளையும் சேர்த்துப் பலமாகத் தட்டுவதைத் தவிர வேறு எந்த வழியும் புலப்படவில்லை. சுகமான வீணை வாசிப்புை அப்படிக் கை தட்டித் தடுப்பது நாகரிகமாகாதுதான். ஆனாலும், இந்த ஒண்ணாம் நம்பர் சந்து ஜன்மங்களுக்கு நாகரிகமென்ன கேடு? மனிதர்களைப் கூப்பிடும்போது மிருகங்களைக் கூப்பிடுவது போல் அநாகரிகமாக ஒசைப்படுத்திக் கூப்பிடக் கூடாதுதான். ஆனால், அதே சமயத்தில் மிருகங்களைக் கூப்பிடும்போது மனிதர்களைக்

கூப்பிடுவது போல் இங்கிதமாகப் பெயர் சொல்லிக்