பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 ஆத்மாவின் ராகங்கள்

கூப்பிட வேண்டிய அவசியமில்லை. உடம்பை வியாபாரம் பண்ணும் ஒருத்தியை மிருகமாக நினைப்பதில் தப்பென்ன?

'மிருகம் இவ்வளவு சுகமாக வீணை வாசிக்குமா? மிருகம் இத்தனை வாசனையுள்ள பூக்களைத் தொடுத்துச் சூடுமா?"

அவன் மனத்திற்குள்ளேயே ஒரு போராட்டம் நடந்தது. கடைசியில் தன்மானமே வென்றது. அவன் பலமாகக் கை தட்டினான். சிறிது நேரம் கை தட்டி பின்னும் வீணை வாசிப்பது நிற்கவில்லை. ஒரு வேளை கொஞ்சம் செவிடாயிருப்பாளோ? - சே சே! இத்தனை சுகமான வாத்தியத்தை இசைப்பவள் செவிடாயிருக்க முடியாது; இருக்கவும் கூடாது. மறுபடியும் பலங் கொண்ட மட்டும் கைகளை இணைத்துத் தட்டினான் ராஜாராமன். பூப் போன்ற அவன் கைகளில் இரத்தம் குழம்பிவிட்டது. சட்டென்று வீணை ஒலி நின்றது. புடலை சரசரக்க வளையல்கள் குலுங்க யாரோ எழுந்துவரும் ஓசை கேட்டது. அடுத்த கணம் எதிரே கைப்பிடிச் சுவரருகில் வந்து நின்ற வனப்பைப் பார்த்ததும் முதலில் அவனுக்குப் பேச வரவில்லை. சரஸ்வதியின் மேதைமையும், லட்சுமியின் சுமுகத் தன்மையும் சேர்ந்த ஒர் இளம் முகம் அவன் கண்களை இமைக்க முடியாமற் செய்தது. அந்த முகத்தின் வசீகரத்தில் அவன் பேச முடியாமல் போய்விட்டான்.

'கைதட்டினது நீங்கதானே?"

பேசுகிறாளா, அல்லது இதழ்களாலும் நாவினாலுமே மீண்டும் வீணை வாசிக்கிறாளா என்று புரியாமல் மருண்டான் ராஜாராமன்.

நெகிழ நெகிழத் தொள தொளவென நீராடி முடித்த கூந்தலும், நீலப் பட்டுப் புடவையும், நெற்றியில் திலகமுமாக நின்றவள் கேட்ட கேள்வியில் எதைக் கண்டிப்பதற்காக அவளைக் கைதட்டிக் கூப்பிட்டோம்