பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நா. பார்த்தசாரதி 41 என்பதை அவனே மறந்துவிட்டான். அவளுடைய மூக்கிலிருந்த வைரப் பேஸ்ரியில் சூரிய ஒளிபட்டுத் தோற்றுக் கூசியது போலவே அவனும் கூசிப் போனான்.

கைதட்டிவிட்டுப் பேசவும் முடியாமல் நிற்கும் அந்த வாலிபனிடம் வெட்கியது போல் அவளும் மெல்ல உள்ளே திரும்பினாள். துண்டு நழுவிய பொன் நிற மார்பில் அரைக்கீரை விதை தூவினாற்போல் கருகருவென்று ரோம மடர்ந்த இவன் நெஞ்சையும் தோளையும் அளந்து விட்டு அவளுடைய அபூர்வமான விழிகள் தரையை நோக்கிக் கொண்டே சிரித்தன. மெல்ல உட்பக்கம் திரும்பிய அவள் உதடுகளில் புன்னகை ஊறியிருந்தது. ரசம் தளும்பி நிற்கும் திராட்சைக்கனிபோல் மதுவூறிய அந்த இதழ்களில் ஒடி ஒளிந்த நகையுடன் அவள் திரும்பிய போதுதான், கூப்பிட்டவனுடைய தைரியம் திரும்ப வந்தது.

நான் தான் கூப்பிட்டேன்' - என்று தோளும் மார்பும் மறையும்படி மேல் துண்டைப் போர்த்திக் கொண்டே மென்று முழுங்கியபின், மேலே பேசுவதற்காக அவளை நீ" என்பதா நீங்கள் என்பதா என்று தெரியாமல் தவித்தான் ராஜாராமன். 'நீ என்று சொல்ல வாய் வரவில்லை. நீங்கள் என்று சொல்ல மனம் ஒப்பவில்லை. வயதில் அவனை விடச் சிறிய வளாகவே தெரிந்த அவளையொத்த ஒண்ணாம் நம்பர்ச் சந்து அப்சரஸ்களை 'நீ என்று எவனெவனோ நித்தம் நித்தம் கூப்பிட்டு உறவு கொண்டாடுகிறபோது, தான் நீ என்று கூப்பிடுவதால் ஒன்றும் குடிமுழுகி விடாதென்ற துணிவு உண்டாகச் சில விநாடிகள் ஆயிற்று. அப்படியும் பேச்சின் முதல் வாக்கியத்தில் 'நீ யோ உன்னோ வராமலே போய்விட்டது. * -

'ஒரு நாளைப்போல விடியற வேளைக்கு யாராரோ கழற்றி எறியற பூவெல்லாம் இங்கே என்மேலே வந்து விழறது. அதைச் சொல்லத்தான் கூப்பிட்டேன். '