பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 ஆத்மாவின் ராகங்கள்

'யாராரோ ஒண்னுமில்லே! நான்தான் கழற்றி எறியறேன். அது உங்க மேலே விழும்னோ விழுந்து கொண்டிருக்குன்னோ இதுவரை எனக்குத் தெரியாது. இனிமே அப்படிச் செய்யலே. இது செஞ்சதுக்குப் பெரிய மனசு பண்ணி மன்னிக்கணும்," - என்று தாமரை மொட்டுப் போல் கைகூப்பினாள், அவள்.

வணக்கத்தோடு மிகவும் பவ்யமாக மன்னிப்புக் கேட்டுவிட்டு உள்ளே போய்விட்டாள் அவள். எதிர்பாராத அந்த பவ்யம் ராஜாராமனைத் திணறச் செய்தது. முழுக் கோபத்தையும் காட்டித் திட்ட முடியாமல் பண்ணி விட்டாளே என்று ரோஷம் வேறு பொத்துக் கொண்டு வந்தது. அந்த ரோஷத்தை உறங்கப் பண்ணுவதுபோல் பாயைச் சுருட்டிக் கொண்டு படியிறங்கிய அவன் காதில் மிண்டும் வீணையின் இசை வந்து பாய்ந்தது. அவளையும் அவள் முகத்தையும் கூப்பிய கைகளின் விரல்களையும் பார்த்தபின் வீணையை அவள் வாசிக்கிறாளா, அல்லது வீணையே அவளுடைய மதுரமான விரல்களைத் தடவி வாசிக்கிறதா என்று ராஜாராமனுக்குச் சந்தேகம் வந்தது. சந்தேகமும், கோபமும், மாறி மாறி எழும் மனநிலையோடு, அவள் பெயர் என்னவாயிருக்கும் என்ற யோசனையிலும் மூழ்கினான் அவன். அந்தக் குரலும், உடனே பணியும் அந்த பவ்யமும், பிறவியோடு வந்த அழகுகள் போல் அவளுக்குப் பொருந்தியிருந்ததாகத் தோன்றியது. கீழே இறங்கி வந்த பின்பும் அவளை அத்தனை சுலபமாக மறந்துவிட முடியவில்லை, அவனால். பத்திரிகைகளைப் பார்த்து விட்டுக் கீழே இறங்கியபோது பத்தர் முதல் நாள் பிட்டுத் தோப்புக் கூட்டம் பற்றி விசாரித்தார். அவன் எல்லாவற்றையும் அவருக்குச் சொன்னான். பக்கத்து வீட்டு மாடிப் பெண்ணைக் கூப்பிட்டு இரைந்தது பற்றியும் கூறினான். . . . "

'அவளா, மதுரம்னு செல்லமாகக் கூப்பிடுவாங்க - மதுரவல்லீன்னு முழுப்பேரு. தனபாக்கியத்தோட மகள்என்று அவன் கேட்காமலே மேல் விவரங்களைச் சொல்லத்