பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 43 தொடங்கினார் பத்தர். அந்தப் பேச்சை மாற்ற விரும்பிய ராஜாராமன், 'மேலுருக்குப் போறேன் பத்தரே திரும்பி வர ஒரு வேளை சாயங்காலமாயிடும். முத்திருளப்பனாவது, குருசாமியாவது வந்தா சாவியைக் கொடுங்க... அதோடு வாசக சாலையையும் பார்த்துக்கங்க' என்று சாவியை நீட்டினான். . .

'பார்த்துப் போயிட்டு வாங்க தம்பி எங்க பார்த்தாலும் சி.ஐ.டி. நடமாட்டம் இருக்கு உங்க பேரு அவங்க லிஸ்டிலே இருக்காமே?' என்று அவனை எச்சரித்தார் பத்தர். வீட்டுக்கு வந்து, பல் விளக்கி முகம் கழுவிக் கொண்டு புறப்பட்ட அவனைப் பழையது சாப்பிட்டு விட்டுப் போகச் சொன்னாள் தாய். பழைய சோறும் தயிறும் நார்த்தங்காய் ஊறுகாயும் அமிர்தமாயிருந்தன. கொல்லைப் பக்கம் நாலு ஒண்டுக் குடித்தனத்துக்கும் பொதுவான கிணற்றடியில் பெண்கள் கூட்டமாயிருந்ததால் குளிப்பதை, போகிற இடத்தில் எங்காவது வைத்துக் கொள்ள வேண்டியதுதான் போலிருந்தது. பழைய சோற்றிலும் தயிரிலும் ஒரு சக்தி - மறுபடி சாயங்காலம் வரை பசி தாங்கும் போலிருந்தது. குத்தகைக் காரனைப் பார்த்துப் பேசிவிட்டுத் திருவாதவூர்க் காரியங்கள் முடிந்ததும், மேலுரில்கூட சில தொண்டர்களையும் ஊழியர்களையும் அவனால் சந்திக்க முடிந்தது. அந்தத் தொண்டர்களில் ஒருவர் வீட்டிலேயே பகலில் சாப்பிடச் சொன்னார்கள். ஊருக்கு மேற்கே அனைதிறந்து முல்லை வாய்க்காலில் தண்ணீர் விட்டிருந் தார்கள். போய்க் குளித்து அங்கேயே வேஷ்டியை உலர்த்திக் கட்டிக் கொண்டு வந்தான் ராஜாராமன். பகல் உணவு முடிந்து நண்பர் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, மேலுTர்த் தொண்டர்களுக்கும் சில உற்சாகமான திட்டங்களைச் சொன்னான் அவன். அங்கிருந்த தேசத் தொண்டர்கள் அவனை விட வயதில் மூத்தவர்கள் என்றாலும் உலக நடப்பைத் தெரிந்து கொள்ளும் வசதி குறைவாயிருந்ததாலும், நடத்திச் செல்வதற்குத் தலைமை இல்லாததாலும் இரண்டொரு விவரம் தெரிந்தவர்களும்