பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/50

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


48 ஆத்மாவின் ராகங்கள்

'பிள்ளை, எங்கே நடு ராத்திரியில் எழுந்திருந்து வாசக சாலைக்குப் போய்விடுவானோ என்ற பயத்தில் அம்மாவும் தூங்காமல் கொட்டக் கொட்ட விழித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். அவளுடைய பயமும் அக்கறையும் ராஜாராமனுக்குப் புரிந்தன.

மறுநாளும் அவன் வெளியே போகவில்லை. காலை பதினொரு மணிக்கு ஒரு சி.ஐ.டி வீட்டுக்குத் தேடிவந்தான். நல்லவேளையாக, ராஜாராமனின் அம்மாவே அப்போது வாசல் திண்ணையில் இருந்ததால், "அவன் மேலுர்லேருந்து இன்னும் வரலியே!' என்று பதில் சொல்லி அனுப்பி விட்டாள். வந்த ஆள் சி.ஐ.டி.யா இல்லையா என்பது பற்றி ராஜாராமனின் தாய்க்குத் தெரியாது. சி.ஐ.டி.யாக இல்லாவிட்டாலும் அவள் அதே பதிலைத்தான் சொல்லியிருப்பாள். பிள்ளையாண்டான் வெளியே போய் கைதாகக் கூடாதென்பதில் அவளுக்கு அவ்வளவு அக்கறை.

டு)

அடுத்த நாள் காலை விடிவதற்கு முன்பே எழுந்து நீராடித் தயாராகிவிட்டான் ராஜாராமன். காரியத்தைச் செய்துவிட்டே கைதாக விரும்பியதால் வீட்டிலிருந்தே அகப்பட்டுக் கொள்ளாதபடி முன்னெச்சரிக்கை அவசியமாகியது. நண்பர்கள் எல்லோரும் அம்மன் சந்நிதி முகப்பில் தேங்காய் மண்டபத்தில் காலை 9 மணிக்குச் சந்திக்க வேண்டுமென்று பிட்டுத் தோப்புக் கூட்டத்திலேயே சொல்லப்பட்டிருந்தது. வீட்டிலிருந்து முதலில் மேலக் கோபுர வாசல் வழியே கோவிலுக்குள் புகுந்து கொண்டால் அப்புறம் கோவிலிலிருந்தே அம்மன் சந்நிதிக்குப் போவது சுலபம். அவன் புறப்படுகிற காரியத்துக்கு ஆசி வழங்க அவனுடைய அன்னை விரும்ப மாட்டாள். மதுரைக்கே அன்னையாகிய மீனாட்சியிடம் ஆசி வாங்கிக் கொண்டு போக விரும்பினான் அவன். பலபல வென்று கிழக்கு