பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 49 வெளுக்கு முன்பே புறப்பட்டு விட்டான். அவனுடைய தாய் குறுக்கே நின்றாள். - - -

'எங்க கிளம்பியாச்சு?!!

'கோவிலுக்குப் போறேன்....' 'ஜாக்கிரதையாப் போயிட்டு வா...'

அவனைப் பொறுத்தவரையில் அவன் சொல்லியது பொய்யில்லை. தேசமும் கோவிலும் அவனுக்கு ஒன்று தான்; இரண்டையும் அவன் வழிபடுகிறான். இரண்டையுமே அவன் போற்றித் தொழுகிறான். -

பொற்றாமரையில் கை கால் சுத்தம் செய்து கொண்டு அம்மன் சந்நிதி முகப்பில் அவன் பிரவேசித்தபோது, உள்ளே இருந்து எதிரே வந்து கொண்டிருந்தவளைப் பார்த்து ஒரு கணம் தயங்கி நின்றான், அவன். அவள் இதழ்களில் நகை ஒடி ஒளிந்தது. கோயிலுக்குப் போகிற போதும் அந்த ஒண்ணாம் நம்பர்ச் சந்து ஜன்மத்தின் முகத்தில் விழிக்க நேர்ந்ததே என்று மனம் அருவருப்படைய மேலே நடந்தான் அவன். அவளருகே வந்து கொண்டிருந்தவள் அவளுடைய தாயாயிருக்க வேண்டும். தாயின் காதருகே மெதுவாக அவள் ஏதோ சொல்வதையும் அவன் கவனிக்க முடிந்தது. மதுரம் என்று பத்தர் அவளுடைய பெயரைச் சொல்லியிருந்தது நினைவு வந்தது. உள்ளுக்குள் சிரித்துக் கொண்டே நடந்தான் அவன். ஒரு முறை யதேச்சையாக, அவன் பின்னால் அவளைத் திரும்பிப் பார்த்த போது, அவளும் அவனைத் திரும்பிப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள். அந்தப் பார்வையை அவனால் மறக்க முடியவில்லை. அப்படிப் பார்த்ததற்காக அவள் மேல் கோபமும் வந்தது. . . . . . . . . . .

அம்மன் சந்நிதியிலிருந்து சாமி சந்நிதிக்குப் போகும் போதும் அவளை அவன் அங்கே காண முடிந்தது. ஏதோ அபிஷேக கலசங்கள் அலங்கரிக்கப்பட்டுக் குருக்கள்

ஆரா - 4