பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 ஆத்மாவின் ராகங்கள் மாநிலத்தாயை வணங்குதும் என்போம் - என்று பாடிய

ஒவ்வொரு முறையும் சீவசக்தி ததும்பும் தாரக மந்திரம்

ஒன்றை ஓதி முடித்த மகிழ்ச்சி அவர்களுக்குக் கிடைத்தது.

ராஜாராமன் வேலூர் சிறைக்கு வந்த ஒரு வாரத்தில், அவன் தாய் சொல்லி ரத்தினவேல் பத்தர் கைப்பட எழுதப்பட்ட

கடிதம் ஒன்று அவனுக்குக் கிடைத்தது. அந்தக்

கடிதத்திலிருந்து தன்னுடைய தாய் மிகவும் அதிர்ந்து

போயிருக்கிறாள் என்பதை அவன் உணர முடிந்தது.

அதற்கப்புறமும் மாதம் ஒன்றோ இரண்டோ - அவன் தாய்

சொல்லிப் பத்தர் கேட்டு எழுதிய கடிதங்கள் அவனுக்குத்

தவறாமல் கிடைத்துக் கொண்டிருந்தன. ஐந்தாறு மாதங்கள் விளையாட்டுப் போல் வேகமாக ஒடி விட்டன. சிறைவாசம்

நன்றாகப் பழகிவிட்டது. முரட்டுத் தரையில் கித்தான் விரிப்பில் துக்கம் கூட வந்தது. அதுவே ஒர் ஆசிரம

வாழ்க்கை போலாகியிருந்தது. மதுரையிலிருந்து அந்த மாதம்

கடிதம் வரவேண்டிய வழக்கமான தேதிக்குக் கடிதம்

வராமல், இரண்டு நாள் கழித்துப் பத்தரே நேரில் சந்தித்து

அவனைப் பரோலில் அழைத்துச் செல்வதற்கான

ஏற்பாடுகளுடன் வந்திருப்பதாகத் தெரிவித்தார் அவர். அவன்

அதற்கான காரணத்தைக் கேட்டபோது,

'உங்கம்மா நெலைமை ரொம்ப மோசமாயிருக்கு. இன்னும் ரெண்டு மூணு நாள் தாங்கறது கூடக் கஷ்டம்' என்று கவலை தோய்ந்த குரலில் பதில் கூறினார் பத்தர். ராஜாராமன் பரோலில் மதுரை போக விரும்பவில்லை. சில தினங்களுக்கு முன்பு பேட்டை முத்துரங்க முதலியாரின் தாயார் காலமான செய்தி வேலூர் சிறைக்கு வந்தபோது 'பரோலில் ஊர் போய் வருமாறு - அவரை எல்லா சத்தியாக்கிரகிகளும் வற்புறுத்தியபோதும், அவர் போக மறுத்திருந்தார். தாய்த் திருநாட்டின் விடுதலைக்காகக் கிடைத்திருந்த துன்பத்தைப் பந்த பாசக் கவலையில் சில நாட்கள் கூட இழக்க விரும்பாத அந்த நெஞ்சுரம், அவனிடம் இருந்தது. பரோலில் அழைத்துப் போவதற்கான எல்லா ஏற்பாடுகளுடனும் வந்திருந்த