பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி - 59 பத்தரோடு போக மறுத்து விட்டான், அவன். அவர் எவ்வளவோ வற் புறுத்தியும் அவன் கேட்கவில்லை.

'அந்தப் பெண் மதுரத்துக்கு ஏதாச்சும் சொல்லணுமா?" என்று பத்தர் கேட்டபோது முதலில் அவனுக்கு அவர் யாரைப் பற்றிச் சொல்லுகிறார் என்றே நினைவு வரவில்லை. புரியவுமில்லை. சிறிது நேரம் கழித்துப் புரிந்ததும் கோபம் தான் வந்தது.

'நீங்க என்ன பத்தரே, எந்தெந்த ஒண்ணா நம்பர்ச் சந்துப் பிறவிகளுக்கெல்லாமோ தகவல் கேட்கிறீங்க...? அதுக்கும் எனக்கும் என்ன இருக்கு? நான் எதுக்குச் சொல்லணும், என்ன சொல்லணும்?' என்று கடுமையாகக் கேட்டதும், பத்தர் பேசாமல் போய்விட்டார். ஆனால் அவர் போய் வெகு நேரமான பின்பும் பழக்கமில்லாத ஒருத்திக்கு ஏதாவது தகவல் உண்டா? - என்று தன்னை எதற்காக அவர் கேட்டார் என்பது புரியாமல் அவன் மனம் யோசித்துக் கொண்டே இருந்தது; பத்தர் என்ன நினைத்துக் கொண்டு அப்படிக் கேட்டார். என்ன எதிர்பார்த்துக் கேட்டார் என்று அநுமானிக்கக் கூட அவனால் முடியவில்லை.

சூரிய ஒளியில் மூக்குத்தி மின்னும், நகை ஒடி ஒளிகிற இதழ்களுடன் கூடிய அந்த வசீகரமான முகமும், கண்களும், வீணையின் குரலும், குரலின் வீணை இனிமையும் மெல்ல மெல்ல அவன் ஞாபகத்தில் வந்து போயின. - -

'அவளைப் பற்றி என்னிடம் தகவல் கேட்க என்ன இருக்கு?" - - - - -

நீண்ட நேரம் இந்தச் சிந்தனையிலிருந்து அவன் மீள வில்லை. அம்மன் சந்நிதி வாசலில் தான் கைதான போதும், அதற்கு முன்னால் கோவிலுக்குள்ளும் தன்னை அவள் பார்த்தாள் என்பதும் இப்போது அவனுக்கு நினைவு வந்தது. பத்தர் வந்து போன அவசரத்திலும், பரபரப்பிலும், அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டிய பல