பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 - ஆத்மாவின் ராகங்கள்

'இல்லை. போக வேண்டாம். நான் போய் இனிமே அவள் திரும்பிக் கெண்டக்கப் போறதில்லே ' என்றான் ராஜாராமன். சொல்லும்போதே அவன் குரல் கம்மியது. கண்கள் கலங்கிவிட்டன. சிரமப்பட்டு அவன் அழுகையை அடக்க முயன்றதைப் பிருகதீஸ்வரன் கவனித்தார். அன்று முழுவதும் ராஜாராமன் சாப்பிடவில்லை. யாருடனும் பேசவில்லை. பிருகதீஸ்வரன் ஆறுதலாக ஏதேதோ கூறிக் கொண்டிருந்தார். மறுநாள் பகலிலும் அவர் வற்புறுத்திய பின்பே அவன் ஏதோ கொஞ்சம் சாப்பிட்டதாகப் பேர் பண்ணினான். நாளாக நாளாக அவன் மனம் ஆறியது. ஒரு வாரத்துக்குப் பின் பத்தர் மறுபடி வந்துவிட்டுப் போனார்.

காலம் ஓடியது.

1931-ஆம் வருடத் தொடக்கத்தில் முதலில் மகாத்மா காந்தி விடுதலை செய்யப்பட்டார். தொடர்ந்து பிற தலைவர்களும், சத்தியாக்கிரகிகளும் நாடெங்கும் விடுதலை செய்யப்பட்டார்கள். காந்தி - இர்வின் உடன்படிக்கை ஏற்பட்டது. வேலூரிலிருந்து ராஜாராமன் நேரே மதுரைக்கு வரவில்லை. வேலூரிலிருந்து விடுதலையானவர்களில் மதுரை, பெரியகுளம் போன்ற ஊர்களைச் சேர்ந்த சத்தியாக்கிரகிகளும் இருந்தனர். அவர்களை வரவேற்க அவரவர்கள் ஊரிலிருந்து தொண்டர்களும் உறவினர்களும் வந்திருந்தனர். ஊர்க்காரர்கள் எல்லோரும் தங்களோடு மதுரைக்கு வந்துவிடச் சொல்லி ராஜாராமனைக் கூப்பிட்டனர். பிருகதீஸ்வரனோ, தன்னோடு புதுக் கோட்டைக்கு வந்து சில நாட்கள் தங்கிவிட்டு அப்புறம் மதுரை போய்க் கொள்ளலாம் என்று அவனிடம் கூறினார். பத்தர் கடைசியாக மதுரையிலிருந்து வேலூருக்கு வந்தபோது, அன்னக்குழி மண்டபத்துச் சந்தில் ஒண்டுக் குடித்தனம் இருந்த வீட்டிலிருந்த பாத்திரம், பண்டம், தட்டுமுட்டுச் சாமான்களை ஒழித்து, மேலுர் வீட்டில் சொந்த