பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி: 65 உபயோகத்துக்கு வைத்துக் கொண்டிருந்த மாடிப் பரணில் கட்டிப் போட்டுவிடுமாறு அவன் கடிதத்தில் தெரிவித்த படியே செய்து விட்டதாகக் கூறியிருந்தார். வாசக சாலை நன்றாக நடப்பதாகவும் கூறியிருந்தார். 'எப்படி நடக்கிறது? யார் வாடகை கொடுக்கிறார்கள்? - பத்திரிகைகள், புத்தகங்கள் வாங்க யார் உதவுகிறார்கள்?' என்றெல்லாம் அவன் தூண்டித் துண்டிக் கேட்டபோது,

'அதெல்லாம் இப்ப எதுக்குங்க தம்பி? நீங்க விடுதலையாகி வந்தப்புறம் சாவகாசமாப் பேசிக்கலாம் - என்று மழுப்பிவிட்டார் பத்தர். ஒரு வேளை அவரே கைப்பணத்தைச் செலவழித்துச் செய்து கொண்டு அதைத் தன்னிடம் சொல்லக் கூசுகிறாரோ என்று தோன்றியது அவனுக்கு. முத்திருளப்பனும் குருசாமியும் கடலூர் சிறையிலிருக்கும் செய்தியையும், அந்தத் தடவை பத்தர் வந்திருந்தபோதுதான் அவன் கேட்டுத் தெரிந்து கொண்டிருந்தான்-எனவே, பிருகதீஸ்வரனோடு புதுக் கோட்டை போய் ஒரு வாரமோ பத்துநாளோ தங்கி விட்டுக் போகலாமென்று அவனுக்கே தோன்றியதால், அவன் அவரிடம் மறுக்காமல் ஒப்புக் கொண்டான். .

'வீட்டைக் காலி செய்து சாமான்களை மேலுரில் கொண்டு போய்ப் போட்டாயிற்று. வாசகசாலை ஒழுங்காக நடக்கிறது - என்ற இரண்டு விவரங்களுமே அவன் உடனடியாக மதுரை போக அவசியமில்லை என்பதை அவனுக்கு உணர்த்தின. அவன் பிருகதீஸ்வரனோடு புதுக்கோட்டைக்குப் போனான். . .

அந்த ஒரு வாரமும் முழுமையாக அவன் புதுக் கோட்டையில் தங்கவில்லை. போகும்போது இருவருமே திருச்சியில் இரண்டு நாள் தங்கிச் சில தேச பக்தர்களையும் தொண்டர்களையும் சந்தித்தனர். புதுக் கோட்ட்ையில் மூன்று நாட்கள் இருக்க முடிந்தது. ஒரு நாள் பிரான்மலைக்கும், இன்னொரு நாள் அன்னவாசல் கிராமத்துக்கும், அவனை அழைத்துச் சென்றார் பிருகதீஸ்வரன். அவருடைய

པའི་རྒྱུ་ ரா - 5