பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 ஆத்மாவின் ராகங்கள்

'அனுமதியாம், பெரிய அனுமதி இதெல்லாம் என்ன பேச்சுன்னு பேசlங்க தம்பீ?" -

ராஜாராமன் பத்தரைப் பார்த்துச் சிரித்தான்.

"உங்களுக்காக எப்படிப்பட்ட மனுஷாளுங்கள்ளாம் என்னென்னவோ செய்யக் காத்துக்கிட்டிருக்காங்க. நான் பெரிசா என்ன செஞ்சிடப் போறேன் தம்பீ..."

'எனக்குக்கூட இங்கே எங்கியாவது சித்திரை வீதியிலியே ஒரு எடம் பாருங்க, பத்தரே! நானும் தையல் மெஷினைத் தூக்கிட்டு வந்துடறேன், - என்றான், அது வரை பேசாமலிருந்த குருசாமி. உடனே ராஜாராமன் மறுத்தான்.

'வேண்டாம்! நீ பாண்டிய வேளாளர் தெருவிலேயே இரு. காந்தியைப் பத்திப் பேசறவங்க நாலா பக்கத்திலேயும் ஊர்ல. இருக்கணும். எல்லாரும் ஒரே தெருவிலே மட்டும் குவிஞ்சிடப்படாது.' . .

ஃபண்டாபீஸ் மணி ஒன்பதடித்தது.

'மனி ஒன்பதடிக்குதே. நீங்க ஏதாவது சாப்பிட வேண்டாமா தம்பீ?"

'நீங்கள்ளாம்?'

நான் சாப்பிட்டாச்சு. முத்திருளப்பனும் குருசாமியும் வீட்டுக்குப் போயிடுவாங்க. உங்களுக்குத்தான் ஏதாவது வாங்கியாரனும்; வாங்கியாரட்டுமா?" .

‘'வேண்டாம், நானே போய்ச் சாப்பிட்டுக்கிறேன், பத்தரே! ஆனா, நான் திரும்பி வர்ற வரை நீங்க இங்கே இருக்கணும், எனக்கு உங்ககிட்டக் கொஞ்சம் பேச வேண்டியிருக்கு." - -

"இங்கேயா சரி இருக்கேன். பக்கத்தில் கடை எதுவும் இருக்காது. நீங்க மேலமாசி வீதியில கட்டிச்சட்டி