பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 71 மண்டபம் பக்கமாய்ப் போய்ப் பார்த்தால் தான் ஏதாவது ரெண்டு பால் கடை, மிட்டாய்க் கடை திறந்திருக்கும். நீங்க திரும்பி வரவரை நான் இருக்கேன் தம்பீ. போய் வாங்க... '

- குருசாமி, முத்திருளப்பன், ராஜாராமன் மூவரும் புறப்பட்டனர். குருசாமியும், முத்திருளப்பனும் மேலமாசி வீதி வரை கூட நடந்து வந்து, ராஜாராமனை விட்டு விட்டுப் போவதற்காக உடன் வந்தனர்.

மேலக் கோபுர வாசல் தெருவும் டவுன் ஹால் ரோடும் சந்திக்கிற இடத்தில் மேற்குமாசி வீதியில் கட்டிச்சட்டி மண்டபத்தருகே ஒரு பால் கடை திறந்திருந்தது. குருசாமியையும், முத்திருளப்பனையும் கூடத் தன்னோடு ஏதாவத சாப்பிடும்படி வேண்டினான் ராஜாராமன். இருவரும் மறுத்து விட்டுச் சிரித்துக் கொண்டே விடை பெற்றனர். - ,

ராஜாராமன் பால் கடையில் கிடைத்ததைச் சாப்பிட்டுப் பாலைக் குடித்துவிட்டு, வாசக சாலைக்குத் திரும்பினான். பத்தர் அவனுக்காக வாசக சாலையில் காத்திருந்தார்.

ஆனால், இதென்ன? நாற்காலிகள் மடக்கி வைக்கப்பட்டு, மேஜை ஒரமாக ஒதுக்கிப் போடப்பட்டு, நடுவாகத் தரையில் மெத்தை விரிக்கப்பட்டிருக்கிறதே! மெத்தையின் இருபுறமும் எம்பிராய்டரி வேலை செய்து பூப்போட்ட தலையணைகள் கிடக்கின்றன. ஒர் ஒரமாக ஒரு வெள்ளிக் கூஜாவும், பக்கத்தில் மேலே டபராவால் மூடிய தம்ளரும் வைக்கப்பட்டிருக்கின்றனவே! -

'இதெல்லாம் என்ன பத்தரே! நம்ப பழைய பத்தமடைப் பாயைக் காணலியே உங்க வீட்டிலிருந்து தலைகாணி மெத்தை கொண்டு வந்தீங்களா? . . . . -

ஒரு நிமிஷம் பதில் சொல்லத் தயங்கிவிட்டு, 'அப்படித் தான்.வச்சுக்குங்களேன் தம்பி? - என்று சொல்லிச் சிரித்தார்