பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/75

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 73 மாசா மாசம் குடுத்திருக்கீங்களே. வாசக சாலை வாடகையும் நீங்க தான் குடுத்திருக்கணும். இத்தனை பெரிய செலவு உமக்குத் தாங்காதுங்கிறது எனக்குத் தெரியும்; நீரும் பெரிய குடும்பஸ்தர்...'

"அதுக்கொன்ன இப்ப? சாவகாசமாய்ப் பேசிக்குவமே?"

'வேலூர்லே நான் கேட்டப்பவே இப்படித்தான் பதில் சொல்லித் தட்டிக் கழிச்சீரு? தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறுதான் பத்தரே! விவரம் சொன்னீர்னா நல்லது.”

பத்தர் சிரித்தார். பதில் சொல்லத் திணறினாற் போலச் சிறிது நேரம் தயங்கினார்.

'நம்ம சிநேகிதம் நீடிக்கணும்னா நீங்க இதைச் சொல்லனும்...' - - -

'தூங்குங்க - தம்பீ? இப்ப இதுக்கென்ன அவசரம்? விடிஞ்சு பேசிக்கப்படாதா?’ என்று மழுப்ப முயன்றார். அவன் விடவில்லை. -

நான் நிம்மதியாகத் தூங்கணும்னா நீங்க இதுக்குப் பதில் சொல்லியாகணும் பத்தரே?

பத்தர் மேலும் சிறிது நேரம் தயங்கினார்.

"இதிலே தயங்கறதுக்கு என்ன இருக்கு?"

'சொன்னா, உங்களுக்குக் கோபம் வருமோன்னுதான் பயமாயிருக்கு தம்பி 'மதுரத்துக்கு ஏதாச்சும் தகவல் சொல்லனுமான்னு வேலூர்லே கேட்டப்புவே உங்களுக்கு கோபம் வந்திச்சு?" . . . .

'அதுக்கும், இதுக்கும் என்ன சம்பந்தம்? அதை ஏன் இப்ப சொல்லிக் காட்டlரு?"