பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/79

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி. 77

   'அப்ப உண்டான அருவருப்புத்தான் இன்னும்

போகலை. கோவில்லே வேறே, அவளோட யாரோ ஒரு

   பணக்கார ஜமீன்தார் உட்கார்ந்திருந்தானே அன்னிக்கி?" "அதுக்கு அவ என்ன செய்யுவா?" -
   'உடம்பை விற்கிற பாவம் மிகமிக மோசமானது!”
    'மனுஷாளோட மனசைப் புரிஞ்சுக்காமே உதாசீனமும் வெறுப்பும் காட்டறது அதைவிடப் பாவம் தம்பி அஹிம்சை சத்தியமும் காந்தி மகாத்மாவோட் உபதேசங்கள். ஒரு சத்தியாக்கிரகிக்கு இத்தனை உதாசீனம் கூடாதுங்க..."
     அவனால் பத்தருக்குப் பதில் சொல்ல முடியவில்லை. மறுபடியும் தலை குனிந்து மெளனமானான். அவன். மதுரத்தை அவன் புரிந்து கொள்ளும்படி செய்வது எப்படி என்ற யோசனையில் பத்தரும் மூழ்கினார். அவளோ ராஜா ராமன் மேல் உயிரையே வைத்து உருகிக் கொண்டிருக் கிறாள். இந்தத் தம்பியின் மனத்திலோ உதாசீனமும் வெறுப் பும் நிரம்பிக் கிடக்கின்றன. எப்படியாவது இந்த உதா சீனத்தை மாற்றியாக வேண்டும் என்று தோன்றியது அவருக்கு. பூப்போன்ற மிருதுவான மனமும் கோமளமான சுபாவமும், அதிரப் பேசாத இங்கிதமும் நிரம்பிய மதுரம் இந்த உதாசீனத்தைத் தாங்கி நிற்காமல் உருகிவிடுவாள் என்பது அவருக்குத் தெரியும்

பத்தரிடம் மறுபடியும் அவனே பேசினான்.

  'உங்க வீட்டிலே காய்ச்சின பால்னு நினைச்சு, அதைக் குடிச்சேன் தெரிஞ்சிருந்தா அதை தொட்டிருக்கக்கூட மாட்டேன். 
  "ஆமாமா? எங்க வீட்டிலேதானே நித்த நித்தம் குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம்லாம் போட்டுப் பால் காய்ச்சிக் குடிச்சிக்கிட்டு இருக்கோம்? சொல்ல மாட்டீங்களா, பின்னே?" .