பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 ஆத்மாவின் ராகங்கள்

       'இந்த மெத்தை தலைகாணியெல்லாம் நீங்க வாங்கியிருக்கப்படாது பத்தரே! அவள் இதுவரை வாசகசாலைக்கும் முத்திருளப்பன் குடும்பத்துக்கும், மற்றதுக்கும், எவ்வளவு குடுத்திருக்காளோ, அவ்வளவையும் கணக்குப் பார்த்துச் சொல்லுங்க. நாளைக்கு மேலுார் போயிட்டு வரேன். வந்ததும், கணக்குத் தீர்த்துப்பிடலாம்.'
   'தீர்ர கணக்கு இல்லீங்க தம்பி, இது ஆத்திரத்துலே பேசlங்க. நிதானமா யோசியுங்க. பின் பக்கத்துச் சந்திலே எத்தினியோ பாவப் பிறவிங்க இருக்கு. அந்தச் சேற்றிலே இந்த மதுரம் ஒரு செந்தாமரை. ஒரு தேச பக்தனுக்கு உபகாரம் பண்ணனும் கிற மனசு அதுக்கு வந்தப்பவே இதை நீங்க புரிஞ்சிட்டிருக்கணும். பணத்தை எண்ணித் திருப்பிக் கொடுத்திடலாம். ஆனா, அந்த நல்ல மனசை நீங்க திருப்பித் தர முடியாது. பணத்தைத் திருப்பிக் கொடுத்தா, அந்த நல்ல மனசுலே முள்ளை வாரிக் கொட்றாப்ல இருக்கும்...'

ஃபண்டாபிஸ் மணி பதினொன்று அடித்தது.

   'தூங்குங்க தம்பி! நான் வீட்டுக்குப் போறேன். தயவு செஞ்சு மெத்தையிலே படுத்துக்கங்க. குடுத்தவங்க - நல்லெண்ணத்தோட, மனசு தவிச்சுத் தவிச்சு, அம்மாவுக்குத் தெரியாமே, அல்லசலுக்குத் தெரியாமே, உங்க உடம்பு நோகு மேன்னு வேதனைப்பட்டுக் கொடுத்திருக்காங்க! சத்தியமான அன்பை அவமானப்படுத்திப்பிட்டா, அப்பறம் காந்திக்குப் பின்னாலே போறதுக்குக்கூட நமக்கு யோக்கியதை இருக்காது."
    கூறிவிட்டுப் பத்தர் புறப்பட்டார். காந்திக்குப் பின்னாலே போறதுக்குக்கூட யோக்கியதை இருக்காது என்று தான் கூறிய கடுமையான வாக்கியத்துக்கு ராஜாராமன் மிகவும் ஆத்திரம் அடைந்து ஏதாவது கடுமையாகப் பதில் சொல்லுவான் என்று அவர் எதிர்பார்த்தார். அவன் பதில் சொல்லாமல் யோசிக்கவே, தன் வார்த்தைகளால் அவன்