நா. பார்த்தசாரதி 81 அடி மனத்திலிருந்து ஆத்ம பூர்வமாக வந்த அந்தக் குரல் சுகமான சங்கீதம் போல் ஒலித்தது. திடீரென்று, செளந்தரியவதியான அவளை எதிரே சந்தித்ததும் அவனுக்குப் பேச வரவில்லை. 'செளக்கியம்' என்பதற்கு அடையாளமாகத் தலையை ஆட்டி வைத்தான்.
'அம்மா காரியம் ஆச்சுப் போலிருக்கே!'
'ம் நாம் கொடுத்து வச்சது அவ்வளவுதான். என்ன செய்யலாம்?' - அவன் அவளுக்குப் பதில் சொன்னான்.
'ரொம்ப இளைச்சுப் போயிட்டீங்க...'
'உடம்பும் கறுத்துப் போயிருக்கே?'
அந்தப் பரிவான விசாரணையின் கனிவில் மூழ்கி, ஒன்றும் பதில் சொல்ல முடியாமல் தவித்த ராஜாராமன்...
"இப்பப் பாடினது யாரு, நீதானே? - என்று கேள்வியை வேறு பக்கம் திருப்பினான்.
அவள் சிரித்தாள்.
'ஏன்? நான்தான் பாடினேன்! உங்களைச் சிரமப்
படுத்தாமல் தூக்கத்திலிருந்து எழுப்ப எனக்கு வேற உபாயம்
தெரியலே?"
"என்ன பாடினே? - 'தெலியலேது ராமா பக்தி மார்க்கமு ன்னு பாடினேன். ஏன்? பாட்டுப் பிடிக்கலியா உங்களுக்கு ?" -
'ரொம்பப் பிடிச்சிருந்தது! காலங்கார்த்தாலே கேட்கறதுக்கு சுகமா இருந்தது; அதான் கேட்டேன்."
'இன்னொரு தரம் பாடட்டுமா?"
ஆரா - 6