பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

                         ஆத்மாவின் ராகங்கள்
         முத்துசாமி ஆசாரி, எல்லாரும் வந்திருக்காங்களாம். பூர்வாங்கக் கூட்டம் இன்னிக்குப் பதினொரு மணிக்கு இருக்காம். உங்களை வரச் சொல்லித் தகவல் சொல்லி அனுப்பியிருக்காங்க, குளிச்சுட்டுப் புறப்படுங்கள்' - என்றார் 
வரப்போகிறாரென்று கேள்விப்பட்டு அவனுடைய வாலிப உள்ளம் துள்ளியது. அவருடைய அற்புதமான, ஆணித்தரமான பிரசங்கத்தைக் கேட்கலாம் என்று தோன்றியபோது, இளம் தேசபக்தன் ஒருவனுக்கு இயல்பாக ஏற்படக்கூடிய குதூகலம் அவனுக்கும் ஏற்பட்டது. குளித்து உடைமாற்றிக் கொண்டு - சித்திரை வீதி மூலை ஹோட்டலில் ஏதோ சாப்பிட்டுவிட்டு அவசர அவசரமாகக் கமிட்டி அலுவலகத்துக்கு விரைந்தான் அவன்.அங்கே கூடியிருந்த பெரியவர்கள் எல்லாரும் அவனை அனுதாபத்தோடு விசாரித்தார்கள். செய்தி தெரிந்த சிலர் அவன் தாய் காலமானது பற்றித்துக்கமும் கேட்டார்கள்.
   'இனிமே என்ன கவலை நம்மூர் சுபாஷ் போஸ்: கூட்டத்துக்கு வந்தாச்சு!' என்று வேடிக்கையாக அவனை வரவேற்றார் ஒரு தேசபக்தர். உள்ளுர் தேசபக்தர்கள் அவனுடைய உயரமான - கம்பீரத் தோற்றத்தை வைத்து செல்லமாக அவனை, மதுரை போஸ் - என்று அழைப்பது வழக்கம். வெண்ணிறக் கதர்க் குல்லாய்களோடு கூடியிருந்த அந்தக் கூட்டத்தின் தலைகளைப் பார்த்த போது பரிசுத்தமான கடமையைச் சிரமேற் சுமந்தபடி அவர்கள் எல்லாரும் அமர்ந்திருப்பதாகத் தோன்றியது அவனுக்கு.
 'ஊர்வலத்துக்கு ஏற்பாடு பண்றத்துக்கும், மகா நாட்டு சேவாதளத் தொண்டர்களை மேற்பார்த்துக்கிறதுக்கும்
  ராஜாராமனை நியமிச்சுடலாம்!' - என்றார் ஜோசப் சார், மற்றவர்களும் அதற்கு ஒப்புக் கொண்டார்கள். ஊர்வலத்துக்கும், மாநாட்டுக்கும், அவரவர்களால்
  முடிந்ததை வசூல் செய்ய வேண்டும் என்று கமிட்டிக் கூட்டத்தில் கூறப்பட்டது. கதர்ப் பிரசாரத்தில் தொண்டர்கள்