பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/87

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நா. பார்த்தசாரதி 85 தீவிரமாக ஈடுபட வேண்டுமென்று பிரதிக்ஞை எடுத்துக் கொள்ளப்பட்டது. 'பாரதி பாடல்களைப் பிரபலப் படுத்துவது ஒவ்வொரு தேசியவாதிக்கும் கடமையாக இருக்க வேண்டும்'- என்று சீநிவாச வரதன் உற்சாகமாகக் கூறினார். அவருடைய மனைவி பத்மாஸ்னி அம்மாள் அடக்கமே உருவாக அருகே அமர்ந்திருந்தாள்.

'மாமா! நீங்க கொடுத்த பாரதி பாடல் புஸ்தகத்தை அநேகமாக மனப்பாடமே பண்ணிட்டேன்' - என்று ராஜா ராமன் அவரிடம் கூறியபோது, “சபாஷ்டா அம்பி!' - என்று அவன் முதுகில் தட்டிக் கொடுத்தார் சீநிவாச வரதன். 'அம்பி என்று கூப்பிட்டால் சிறுவயசிலேயே அவனுக்குக் கோபம் வரும். பலரிடம் அப்படிக் கோபப்பட்டுமிருக்கிறான்; வாலிபனான பிறகும், சீநிவாசவரதன் சார் அப்படிக் கூப் பிடும் போது மட்டும் அவனுக்குக் கோபமே வருவதில்லை.

கமிட்டி ஆபீஸிலிருந்து மறுபடி அவன் வாசக சாலைக்கு வரும்போது ஒரு மணிக்கு மேலாகிவிட்டது.

'டி.பன் காரியர்லே சாப்பாடு GLGaు இருக்கு போய்ச் சாப்பிடுங்க தம்பீ - என்றார் பத்தர். சந்தேகத்தோடு அவன் அவரைக் கேட்டான். * - - * . . .

'ஏது? உங்க வீட்டிலேருந்து கொண்டாந்தீங்களா?' பத்தர் சிரித்தார். பதில் சொல்லத் தயங்கினார். - "எங்கேருந்து கொண்டாந்தா என்ன? போய்ச் சாப்பிடுங்க. அப்புறம் பேசிக்கலாம்.

அவன் மேலே படியேறி வந்தான். டி.பன் கேரியரில் தனபாக்கியம்' என்ற எழுத்து அடித்திருந்தது. அவனுக்குக் கொள்ளவும் முடியாமல், தள்ளவும் முடியாமல் மனசு தவித்தது. பத்தரைக் கூப்பிட்டுத் திருப்பிக் கொடுக்கச் சொல்லி விட்டு ஓட்டலுக்குப் போய்விடலாமா என்று ஒரு