உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85 ஆத்மாவின் ராகங்கள் கணம் தோன்றினாலும், அடுத்த கணமே மதுரத்துக்கு மனசு புண்படுமே என்று தயக்கமாகவும் இருந்தது.

தயக்கத்தோடு தயக்கமாக அவன் சாப்பிட்டுக் கை கழுவியதும் பத்தர் மேலே வந்தார்.

'கவலைப்படாதீங்க தம்பி தப்பான காரியத்துக்கு நான் எப்பவும் ஒத்தாசையாக இருக்க மாட்டேன். எது கில்ட், எது அசல்னு எனக்கு நல்லாத் தெரியும். வீணா மனசு நோகப் பண்ணாதீங்க. '

அவர் என்ன சொல்கிறார், யாரைப்பற்றிச் சொல்கிறார் என்பது அவனுக்கு நன்றாகப் புரிந்தது. அவன் அவரை மறுத்துப் பேசவில்லை. அந்த மெளனத்தின் அங்கீகாரம் பத்தருக்குத் திருப்தியளித்திருக்க வேண்டும். உடனே அந்தப் பேச்சை விட்டுவிட்டு, மகிழ்ச்சியோடு கமிட்டி ஆபீஸ் கூட்டத்தைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினார் அவர். அவனும் அவருக்கு அதை விவரித்துச் சொல்லலானான். பத்தர் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார். சொல்லி முடிந்ததும், "சாயங்காலம் முத்திருளப்பனும், குருசாமியும் வருவாங்களா? இல்லே யாரிட்டவாவது தகவல் சொல்லி அனுப்பணுமா?" -என்று அவரைக் கேட்டான் அவன்.

'தகவல் சொல்லி அனுப்ப வேண்டியதில்லை. அவர்களே சாயங்காலம் வருவாங்க. பொழுது சாயற வரைக்கும் பார்ப்போம்' - என்று பதில் சொல்லிவிட்டுக் கடை வேலையைக் கவனிக்கச் சென்றார் அவர். மொட்டை மாடிப்பக்கமிருந்து மறுபடி அந்த வீணைக்குரல் ஒலித்தது.

சாப்பாடு பிடிச்சிருந்ததா?’ காலி டிபன் கேரியரோடு எழுந்து படியேறி மொட்டை மாடிக்குப் போனான் அவன். டி.பன் கேரியரைத் திருப்பிக் கொடுத்துவிட்டு, அவன் கேட்டான்: - . . . . w

'நீ என்னை ரொம்பச் சிரமப்படுத்தறே மதுரம்'