பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/89

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரத 87 'உங்களை முதமுதலாகப் பார்த்தது லேருந்து இந்தக் கொஞ்ச மாசமா என் மனசை நீங்க எவ்வளவு சிரமப்படுத்தியிருப்பீங்க தெரியுமா? அதுக்குப் பதில் நீங்களும் இப்ப சிரமப்படுவதுதான் நியாயம்...'

'இப்படி நிதம் சாப்பாடு கொடுக்கறதுசாத்தியமில்லை...'

'முடிஞ்சபோது கொடுக்கிறேன். முடியாதபோது வெளியிலே சாப்பிடுங்கோ...'

'பிரயோஜனப்படாத விருந்தாளிக்கு விழுந்து விழுந்து உபசாரம் செய்கிறாய்

'வந்து போகிறவர்கள் தான் விருந்தாளிகள். நிரந்தரமாகத் தங்கிவிட்டவர்களை அந்த வார்த்தை குறிக்காது...'

"எங்கே தங்கிவிட்டவர்களை '

'இங்கே!' - என்று நெஞ்சைத் தொட்டுக் காட்டிச் சிரித்துக் கொண்டே அவள் உள்ளே போய்விட்டாள். வாதங்களால் ஜெயிக்கமுடியாத நனினத்துக்குத் தோற்றுப் போய் உள்ளே படியிறங்கித் திரும்பினான் ராஜாராமன். அவளிடம் எப்படிப் பேசி ஜெயிப்பது, அல்லது தோற்கச் செய்வதென்று தெரியவில்லை அவனுக்கு. புதுக்கோட்டை யிலிருந்து வரும்போது பிருகதீஸ்வரன் அவனுக்கு நிறையப் புத்தகங்கள் கொடுத்தனுப்பியிருந்தார்.

அன்று சாயங்காலம்வரை புத்தகம் படிப்பதில் கழிந்தது. சாயங்காலம் முத்திருளப்பனும், நண்பர்களும் வந்தார்கள். 'ஊர்வலம், மாநாட்டு ஏற்பாடுகளைக் கவனிக்கணும் ? சத்தியமூர்த்தி வராராம்'- என்று முத்திருளப்பன், குருசாமி முதலிய நண்பர்களிடம் விவரித்தான் ராஜாராமன்.

'மாகாண மாநாடு தங்கள் ஊரில் நடக்கப்போகிறது. ஈத்தியமூர்த்தி தலைமை வகிக்க வரப்போகிறார் - என்ற செய்தி எல்லோருக்குமே உற்சாகத்தை அளித்தது. வசூலில்