உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

GD

டெலிபிரிண்டரில் கிடைத்த கடைசித் தந்தியையும் சேர்த்த பின்பும் கூடப் பதினைந்து வரிகளுக்கு இடம் மீதமிருந்தது. வெளியூர்களுக்கான டாக் - எடிஷன் இறங்கி, 'ஸிடி எடிஷனுக்கு மிஷின் தயாராயிருப்பதாக ஃபோர் மேன் நாயுடுவும் எச்சரிக்கை கொடுத்தாயிற்று. நைட் ரிப்போர்ட்டர் நாராயணசாமி கடைசித் தந்தியைச் செய்தியாக்கிக் கொடுத்துவிட்டு, இரண்டு மேஜைகளை இணைத்துப் படுக்கையாக்கிக் கொண்டு உறங்கத் தொடங்கியிருந்தார். ஹால் கடிகாரம் ஒரு மணி அடித்தது. அவ்வளவு பெரிய ஹாலில் நிசப்தத்தை மிரட்டுவது போல் ஒற்றை மணியோசையின் நாத அலைகள் சில விநாடி களுக்குத் துரத்துவது போன்று சுழன்று கொண்டிருந்தன. நாயுடுவின் குரலைக் கேட்டுத் தலை நிமிர்ந்தேன். .

"விடி எடிஷன் பேஜ் க்ளோஸ் பண்ணி மிஷின்ல ஏத்தலாமா? கடைசித் தந்திக்குக் கீழாலே இருக்கற எடத்தைக் காலியாவே வுட்டுப்புடறேன் சார்.'

நான் நாயுடுவுக்கு மறுமொழி கூறுவதற்குள் எதிர்பாராத விதமாக டெலிபிரிண்டர் சீறத் தொடங்கியது. ஃபோர்மேன் முகத்தைச் சுளிப்பதைக் கவனித்துக் கொண்டே டெலி பிரிண்டரை நோக்கி விரைந்தேன். துரங்கத் தொடங்கிவிட்ட நைட் ரிப்போர்ட்டரின் உதவியை இனி நான் எதிர்பார்க்க முடியாது. லிடி எடிஷன் மிஷினில் ஏற வேண்டிய நேரத்தில் டெலி பிரிண்டரை நோக்கி ஓடவேண்டிய அவசியம் நைட் எடிட்டருக்கு இல்லையென்றாலும், பத்திரிகைத் தொழிலைப் பொறுத்தவரை பதவியின் கெளரவத்தை விடத் தொழிலின் நாணயம் பெரிதென்று நினைக்கிறவன் நான். மூன்று நிமிஷம் சீறிவிட்டு டெலிபிரிண்டர் ஒய்ந்தது. அலுமினியம் ஸ்கேலை எடுத்துத் தாளைக் கிழித்தபோது