பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88. ஆத்மாவின் ராகங்கள் தங்கள் பங்கை அதிகமாகக் கொடுப்பதற்காக நான்கு கோபுர வாசலிலும் உண்டியல் ஏந்தி நிற்கலாம் என்று யோசனை கூறினான் குருசாமி. முத்திருளப்பன் குருசாமியைக் கிண்டல் பண்ணினார். -

'மீனாட்சியம்மனுக்குப் போட்டியா என்ன? பையிலே இருக்கறதை எல்லாம் வாசல்லேயே நீ பறிச்சிக்கிட்டியின்னா கோயிலுக்கு உள்ளேயிருக்கிற உண்டியல்களோட கதி என்ன ஆகிறது?"

'பாரதமாதாங்கிற பெரிய அம்மனைச் சிறை மீட்கணும்னு எதையும் செய்யலாம். அந்த மீனாட்சி யம்மனுக்கே வாயிருந்தா, 'வாசல்லே நிற்கிற கதர் குல்லாய்க் காரனோட உண்டியல்லே உள்ளே போடற காசைப் போடுங்கன்னு அதுவே சொல்லி ஆசீர்வாதம் பண்ணும்' என்று குருசாமி முத்திருளப்பனுக்குப் பதில் சொன்னான்.

- ‘'நீ சொல்றே அப்பனே! ஆனா எத்தினி மகாத்மாக்கள் பிறந்தாலும், இந்த ஜனங்களுக்குப் புத்தி வராது போலேருக்கு. இன்னிக்கு வஸ்திராலயத்திலே ருந்து ஒரு மூட்டை கதர்த்துணியை வாங்கிச் சுமந்துக்கிட்டுத் தெருத் தெருவாகப் போனேன். ஒருத்தன் கேட்டான், 'வாத்தியாரையா, உமக்கேன் இந்த வம்பு விருதுப்பட்டிச் சனியனை வெலைக்கு வாங்கறாப்ல இதுல நீர் ஏன் போய் மாட்டிருக்கிறீரு? பேசாம டானா டாவன்னாச் சொல்லிக் கொடுத்துக்கிட்டிருக்கப்படாது?ன்னு, இன்னொரு ஷர்பத் கடைக்காரன் கேலி பண்ணினான். இடம் தெரியாமே ஒரு ஜஸ்டிஸ் பார்ட்டி வக்கீல் வீட்லே போயிக் கதர் சட்டையோட நுழைஞ்சி வச்சேன் அடிக்கவே வந்தாங்க. கடைசியிலே எங்கிட்ட மனசு கோணாமக் கதர் வாங்கினது யாருங்கிறே? நான் வேலை பார்த்தப்பக் கூட இருந்த ரெண்டு மூணு வாத்தியாருங்களும் தெற்கு வாசல் நல்லமுத்துப் பிள்ளையும் தான் முகமலர்ந்து வாங்கினாங்க-'

முத்திருளப்பன் கதர் விற்கப்போன அனுபவத்தைக் கேட்டு ராஜாராமனுக்கு மிகவும் வருத்தமாயிருந்தது.