பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 - ஆத்மாவின் ராகங்கள்

பத்தர் கில்ட் கடையைப் பூட்டிக் கொண்டு புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தார். சாவியை அவனிடம் கொடுத்து விட்டு,

'உடம்பு ரொம்ப இளைச்சுக் கறுத்துப் போயிருக்கிங் களாம், தம்பி வெளியே கண்ட கண்ட இடத்துல சாப்பிட வேண்டாம், கொஞ்ச நாளைக்கு நானே எல்லாம் தரேன். உடம்பு தேறுகிறவரை இங்கேயே சாப்பிடச் சொல்லி அவரிட்ட வற்புறுத்திச் சொல்லுங்கோ, பத்தரேன்னு மதுரம் பிடிவாதம் பிடிக்குது...'

'அது எப்படி சாத்தியமாகும், பத்தரே? ஒரு நாளைப் போல அம்மாவுக்குத் தெரியாமே, அதுதான் எப்படிச் சாப்பாடு எடுத்துக் கொடுக்கும்? நான்தான் நாலு இடம் அலையறவன் எப்படிச் சாப்பாட்டுக்காக இங்கேயே ஒடி வர முடியும்?"

'உங்களுக்கு முடியுமா இல்லையாங்கிறதுதான் கேள்வியே தவிர, அதுக்கு முடியுமாங்கறது கேள்வியே இல்லை, தம்பி, அந்த வீட்டுக்கு அதுதான் ராணி. இந்த மாதிரி விஷயத்திலேயே உங்க கெட்டிக்காரத்தனம் என் கெட்டிக்காரத்தனம் எல்லாம் அதனோட சாமர்த்தியத்துக்கு உறை போடக் காணாது. குறிப்பறிஞ்சு காரியங்கள் செய்யறத்துலே அதுக்கு இணையே சொல்ல முடியாது. தனபாக்கியத்தைத் தவிர அந்த வீட்டிலே - அவ தம்பி - மதுரத்தோட மாமாக்கிழவன் ஒருவன் இருக்கிறான். ரொம்ப நாளா மிருதங்கத்தைத் தட்டித் தட்டியே என்னவோ, அவன் டமாரச் செவிடாகிப் போய் விட்டான். மங்கம்மான்னு ஒரு வேலைக்காரக் கிழவி இருக்கா. அவளே தான் சமையற்காரியும். அவ மதுரத்துக்கு ரொம்ப அந்தரங்கம். தனபாக்கியம் பெத்தாளே தவிர, மதுரத்தை சீராட்டி ஊட்டி வளர்த்தவள் மங்கம்மாதான். அவளுக்கு மதுரம் செல்லப் பெண் மாதிரி * . .

'இப்ப எதுக்கு இந்தக் குலமுறைக் கதையெல்லாம் சொல்றீங்க, பத்தரே?" -