பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 93 'சுவறேறிக் குதிக்கிற அளவுக்கு வந்தாச்சு இல்லியா மதுரம்?' - -

"என்ன செய்யறது? போனாப் போறதுன்னு நான் அதைச் செய்யாட்டா, நீங்க செய்ய வேண்டி வருமே!'

நான் ஏன் செய்யறேன்?"

வேண்டாம்! நானே ஏறிக் குதிச்சுக்கிறேன். வீணா அதுக்கு ஒரு சண்டையா? சாப்பிட உட்காருங்கோ.:

"மொட்டை மாடியிலேயே உட்காரட்டுமா?"

'வேண்டாம் திறந்தவெளியிலே சாப்பிடப்படாதுன்னு சாஸ்திரம். தவிர, வெக்கையாகவும் இருக்கும்...'

சுவரேறிக் குதிக்கப்படாதுன்னு சாஸ்திரம் ஒண்னும் இல்லை போலிருக்கு..."

'சுவரேறிக் குதிச்சுப் பாக்கறபடி என்னைச் சிரமப்படுத்தர தெய்வத்தைக் கேட்க வேண்டிய கேள்வி இது."

அவன் உள்ளே வந்து உட்கார்ந்தான். அவள் இலையைப் போட்டு இட்லியை எடுத்து வைத்தாள். அந்த வளைகளனிந்த அழகிய ரோஜாப்பூக் கை - வெள்ளை வெளேரென்று மல்லிகைப் பந்து போலிருந்த இட்லியை எடுத்து வைப்பது செந்தாமரைப்பூ ஒன்று வெண் தாமரைப் பூவைப் பரிமாறுவது போலிருந்தது. செல்லத்தம்மன் கோவில் செக்கு நல்லெண்ணெயும், மிளகாய்ப் பொடியும், இட்லிக்கு அமுதாய் இசைந்தன.

'உங்கம்மா வந்துட்ப் போறாளேன்னு பயமில்லையா மதுரம்? ரொம்ப நிதானமாப் பறிமாரறியே?"

'இன்னிக்குப் பிரதோஷம். பிரதோஷம், சோம வாரம்னா

எங்கம்மாவும், மாமாவும் முதல்லே திருப்பரங்குன்றம், அப்புறம் மீனாட்சி கோயில், அப்புறம் பழைய சொக்கநாதர்