94 ஆத்மாவின் ராகங்கள் கோயில், எல்லாத்துக்கும் போயிட்டு அர்த்த ஜாமம் முடிஞ்சப்பறம்தான் திரும்புவாங்க."
'நீ போகலியா கோவிலுக்கு?"
"என் கோவில்தான் இங்கே பக்கத்திலேயே வந்தாச்சே :
இப்படிச் சொல்லிவிட்டு, அவன் ஆத்மாவிலேயே ஊடுருவிப் பதிவதுபோல் புன்னகை பூத்தாள் அவள். புதிய கரி அடுப்பும், வாளியும், அவள் பார்வையில் தென்பட்டன.
'என்னது? மெல்ல மெல்ல இந்த அறையிலேயே ஒரு பெரிய சம்சாரியா மாறிண்டு வாராப்லே இருக்கே...'
"ஆமாம், அதுவும் இந்தச் சமயத்தில் இந்த அறையை யாராவது பாாத்தால் ஒரு சம்சாரம் நடந்துகொண்டிருப்பது போல் தான் தெரியும்!"
இதைக் கேட்டு அவள் கலீரென்று சிரித்துவிட்டாள். சிரித்த உடனேயே நாணித் தலை கவிழ்ந்தாள். ஒரக்கண்களால் பருகுவதுபோல் அவனைத் தாபத்தோடு பார்த்தாள்.
'மதுரம்...'
'என்ன? :
"நீ ரொம்ப அற்புதமா வீணை வாசிக்கிறே!"
'இப்ப இங்கே கொண்டு வந்து வாசிக்கட்டுமா?"
‘'வேண்டாம்! காலையிலே நீ அங்கே ருந்து வாசிக் கறதைக் கேட்டுத்தான் கண் முழிக்கிறேன்.
'உங்களை எழுப்பிவிடத்தான் நான் வாசிக்கிறேன்; இல்லையா?* . . . . . -