பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/97

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 95

'எழுந்திருக்கிறேன். மறுபடி உன் வாசிப்பு தூங்க வைத்துச் சொப்பனலோகத்துக்குக் கொண்டு போகிறது. தூங்கிவிடுகின்றேன்."

'ஜாக்கிரதை' என் வீணைக்கச்சேரிக்கு ரேட் அதிகம். ஒரு கச்சேரிக்கு ஐநூறு ரூபாய் வாங்கறா எங்கம்மா. நாகமங்கலம் ஜமீன்தார் அதை இங்கேயே வந்து தந்துடறாரு.”

நான் ஜமீன்தார் இல்லையே, மதுரம்?"

‘'தேவதைகள் ஜமீன்தார்களைவிடப் பெரியவர்கள் - மரியாதைக்குரியவர்கள்-'

'சில சமயங்களில், நீ பாடுவதைவிடப் பேசுவதே சங்கீதமாயிருக்கிறது, மதுரம்...'

'நீங்க புகழதீங்கோ, நீங்க புகழ்ந்தா எனக்குக் கிறுக்கே பிடிச்சுடும் போலிருக்கு." - -

-திடீரென்று வேறொரு விஷயம் ஞாபகத்துக்கு வந்து அதை அவளிடம் சொல்லத் தொடங்கினான் ராஜாராமன்.

'மாகாண காங்கிரஸ் மதுரையிலே கூடப் போறது. சத்தியமூர்த்தி தலைமை வகிக்கப் போறார். அதுக்கான சில வேலைகளை நானும் செய்யணும். நாளையிலேருந்து பண வசூலுக்காக உண்டியல் எடுக்கப் போறாம். பகல் சாப்பாடு எங்கெங்கே நேர்ந்ததோ, அங்கேதான். எனக்காக நீ பகல் சாப்பாடு வைக்க வேண்டாம். மறுபடி நான் சொல்ற வரை

விட்டுடு.

'அதுசரி, அந்த வகுலுக்கு, நானும் கொஞ்சம் பணம் தரலாமோ?" - -

'நீயா, ஏற்கனவே நீ நெறையச் செஞ்சிருக்கே, அதுக்கு நான் கடன் பட்டிருக்கேன். இப்ப வேறே சிரமம் எதுக்கு?'