96 ஆத்மாவின் ராகங்கள்
"கடன் கிடன்னு நீங்க சொல்றதா இருந்தா இப்பவே நான் இங்கேயிருந்து எழுந்திருந்து போயிடுவேன். கொடுக்கிறதை மரியாதையா வாங்கிக்கணும். வாங்கிக் காட்டா உண்டியல்லே கொண்டு வந்து போடுவேன்; அப்ப எப்படித் தடுப்பீங்க நீங்க? கேட்டுவிட்டுச் சிரித்தாள் அவள்.
'அது சரி மரியாதையா வாங்கிக்கணும்னியே; அது யாருக்கு மரியாதை?"
'தப்புத்தான்? அப்பிடிச் சொன்னதுக்காகக் கன்னத்துலே போட்டுக்கிறேன்...'
"கன்னத்திலியும் போட்டுக்க வேண்டாம்; கால்லேயும் போட்டுக்க வேண்டாம்! பணத்தை எடு!"
அரைத்த சந்தனம் போல் செழுமை மின்னும் தோளில் ரவிக்கை மடிப்பிலிருந்து இரண்டு நூறு ரூபாய் நோட்டுக்களை எடுத்து அவனிடம் நீட்டினாள் அவள். அவள் திகைத்துப் போனான்.
அந்த நோட்டுக்களில் பச்சைக் கற்பூர வாசனை கமகமத்தது. அவன் வாங்கிக் கொண்டான்.
"பணம் மணக்கிறது. மதுரம்! கொடுத்தவர்களின் கைராசி போலிருக்கிறது..." . . . . . . . . . . . . . . . . .
"ஒரு வேளை வாங்கிக் கொண்டவர்களின் கைராசியாகவும் இருக்கலாம்.'
திரும்பப் புறப்படும்போது, திடீரென்று அவன் எதிர்பாராத சமயத்தில், அவனுடைய பாதங்களைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டு தட்டுடன் புறப்பட்டாள் அவள். அவள் செய்கை அவனை மெய்சிலிர்க்கச் செய்தது. அந்தச் சிலிர்ப்பிலிருந்து நீண்ட நேரமாக மீள முடியவில்லை. அவள் போன சிறிது நேரத்திற்குப்பின் அவளுடைய மாடியறையிலிருந்து பாடல் கேட்டது.