உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 97

'தெலியலேது ராமா பக்தி மார்க்கமு' - உருகி உருகிப் பாடினாள். மிக இங்கிதமாகப் பக்தி செய்கிற ஒருத்தி பக்தி மார்க்கம் தெரியவில்லையே என்று பாடுவதைக் கேட்டு அவனுக்கு வியப்பாயிருந்தது. அந்த இரண்டு நூறு ரூபாய் நோட்டுக்களைக் கண்களில் ஒற்றிக் கொண்டான்

ராஜாராமன்.

மறுநாள் காலையில் குருசாமி வசூலுக்கான உண்டியல் களோடு வந்தபோது முதல் உண்டியலில் தன் கையாலேயே அந்த இரண்டு நூறு ரூபாய் நோட்டுகளைப் போட்டான் ராஜாராமன். குருசாமியும் வேறு இரண்டு மூன்று தொண்டர் களும் உண்டியல்களோடு கோபுர வாசல்களுக்குச் சென்றார் கள். குளித்து உடை மாற்றிக் கொண்டு முத்திருளப்பனை எதிர்பார்த்துக் காத்திருந்தபோது- மதுரம் வந்தாள். அவள் கையில் ஒரு கூடை நிறையக் கதர் நூல் சிட்டங்கள் பெரிய கட்டாக இருந்தன. -

'என்னது, மதுரம்?" 'எனக்கு நீங்க உபகாரம் பண்ணனும். 'உபகாரமா? நானா?' "ஆமாம்! இந்தச் சிட்டங்களைப் போட்டு ஒரு கதர்ப் புடவை - வாங்கிண்டு வந்து கொடுங்கோ' -

'எனக்கு ஆட்சேபணையில்லே மதுரம் ஆனா, உங்கம்மா உன்னைக் கதர்ப் புடவை கட்டிக்க விடுவாளா?" 'விடாட்டா, உங்களைப் பார்க்க வர்ரப்போ மட்டும் கட்டிண்டு வருவேன்..." ་་ “. ........ །

"உனக்குக் கதர் பிடிக்குமா?" 'உங்களுக்கு எதெல்லாம் பிடிக்குமோ அதெல்லாம் எனக்கும் பிடிக்கும்...' - ஆ.ரா - 7