பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 ஆனந்த முதல் ஆனந்த வரை அடிகளாரது சுய சரிதத்தைப் பயிலும்போது அவர் தந்தையார் இறந்த காலத்தில் தாம் இருந்த நிலையை ஒளி மறைவில்லாது எழுதியுள்ளமை அறிந்தேன். அதுபோன்றே நான் என் தந்தை இறந்த இரண்டாம் நாள்-இளையனா யினும்-சிறிதும் வருத்தமின்றிப் பிறருடன் விளையாடிக் கொண்டிருந்த இழிவை யாரிடமாவது சொல்ல வேண்டும் என நினைத்தேன். இதோ வாய்ப்பு வந்தது. இன்று உங்கள் முன் எழுதி வைத்துவிட்டேன். - . 15. தேர்தல் விந்தை தேர்தல் இன்று அடிக்கடி நடைபெறுகின்றதைக் காண் கிறோம். கட்சிகள் வெறிக் கொண்டு மாற்றாரைத் தாக்கியும் இழித்தும் செயலாற்றுவது நமக்குப் புதியது அன்று. சில சில தேர்வுகளின் மூலம் கொலை முதலிய கொடுமைகளும் நடக் கின்றதைப் பார்க்கிறோம். இன்று வயது வந்தோருக் கெல்லாம் வாக்குரிமை உண்டு. ஆனால் அன்று நான் வாலாஜாபாத்தில் படித்துக் கொண்டிருந்தபோதுஏழாவதோ எட்டாவதோ படித்துக் கொண்டிருந்தபோதுஅனைவருக்கும் வாக்குரிமை கிடையாது. அரசாங்கத்துக்கு வரி கட்டுபவர்கள் மட்டுமே வாக்காளர்களாக இருந்தார்கள் என நினைக்கிறேன். சட்டசபைகளுக்குப் பத்து ரூபாய்க்கு மேல் வரி கட்டுபவர்களும், மாவட்டம் முதலியவற்றிற்குச் சாதாரண வரி கட்டுபவர்கள் தொடங்கி வரி கட்டுபவர் அனைவரும் வாக்காளராக இருந்தார்கள் என்பது என் எண்ணம். அது சரியா தப்பா என்று நான் இன்று ஆராய நினைக்கவில்லை. இன்றுதான் எல்லாரும் இந்நாட்டு மன்னர் கள் என மாறிவிட்டார்களே! அந்தக் காலத்தில் மாவட்ட உறுப்பினர்களுக்கு அதிக சலுகைகள் உண்டாம். அந்த மாவட்டத்தில் செல்லும்