பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமையின் நினைவுகள் 101 எதிரி வேகமாக வேலை செய்தார் என நினைக்கிறேன். ஆகவே இவர்களும் அதிகமாகச் செய்யவேண்டியதாயிற்று. அத்தேர்தலால் எத்தனையோ நல்லவர் தம் விரோதத்தைச் சம்பாதித்துக்கொள்ள வேண்டியதாயிருந்தது. ஆம்! இந்த அனுபவத்தைச் சுமார் பதினைந்து ஆண்டுகள் கழித்து நானே அந்த மாவட்டக் கழக உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றி கண்டபோது நன்கு உணர்ந்தேன். அன்று வேடிக்கையாகக் கவனித்த தேர்தல் விழா என் வாழ்வில் வினையாகவே வந்து முடிந்தது. நானும் சுமார் பதினைந்து ஆண்டுகள் தொடர்ந்து உறுப்பினராயிருந்த ஒருவரை எதிர்த்துப் போராடவேண்டி இருந்தது. நானும் பலப்பல துண்டுப் பிரசுரங்கள் அச்சிட்டு ஊர் ஊராகச் சென்று பிரசாரங்கள் செய்தேன். அன்று எனக்கு வியப்பாகத் தெரியவில்லை. ஆனால் இளமையில் வியப்பாகவே தெரிந்தது. எனினும் நான் நின்ற தேர்தலில் வெற்றி பெற்றேன். வாலாஜாபாத் அப்பாவின் அன்றைய தேர்தல் அவருக்குத் தோல்வியையே தேடித் தந்தது. அப்பா அவர்களைப் பற்றிய துண்டுப் பிரசுரங்கள் பலப்பல வகையில் வெளியாயின. அவரை இப்படிக் கைப் பொம்மையாக யார் எப்படி ஆக்கினார்கள் என்பதே எனக்குப் புரியாத புதிராக இருந்தது. அக்காலத்திலிருந்தே திரு. வா. தி. மா. அவர்களைப் பிள்ளைகள் அப்பா' வென்றும், பெரியலர்கள் வாலாஜாபாத் அண்ணா” என்றும் அழைப்பார்கள். அவர்களைப் பற்றிய துண்டுப் பிரசுரங் களில் அவர்கள் இந்துமத பாடசாலையைத் தோற்றுவித்தமை பற்றியும் விளக்கங்கள் இருந்தன, எதிரிகளும் அவ்வப்போது சில சில இதழ்களையும் துண்டுப் பிரசுரங்களையும் வெளியிட் டனர் என நினைக்கின்றேன். ஏனெனில் அவற்றிற்கு மறுப்பெனும்படி சிற்சில துண்டுப் பிரசுரங்கள் அப்பா' சார்பில் வெளியாயின. அவற்றுள் ஒன்றின் தலைப்புத்தான் என் நினைவில் இருந்து இப்பகுதியை எழுத வைத்தது. எதிரி