பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமையின் நினைவுகள் 103 இரவு ஒன்பது மணிக்குக் காஞ்சிபுரத்திலிருந்து அச்சிட்ட வற்றை எடுத்துக்கொண்டு வருவர். ஆசிரியர்களும் பிறரும் அவற்றை இரவோடு இரவாகப் பிரித்து இன்னின்ன ஊருக்கு இவ்வளவு இவ்வளவு என்று தனித்தனி ஏற்பாடு செய்து விடியற்காலை ஐந்துமணிக் கெல்லாம் புறப்படுவார்கள். அதற்குள் அன்றைப் பொழுதில் எதிரி எந்தெந்த ஊரில் எப்படி எப்படி மக்களை மடக்கி வாக்குப்பெற முயல்கின்றார் என்ற செய்திகளைச் சிலர் கொண்டு வருவார்கள். அவர்கள் சொல்லுவது சரியோ பொய்யோ, அந்நேர வேளையில் அது பற்றிச் சிந்திக்க நேரம் இருக்காது. உடனே மறுநாளைக்கு அந்த ஊரிலெல்லாம் நம் ஆட்கள் சென்று இன்னின்ன செய்ய வேண்டும் என்ற திட்டம் உருவாகும். இப்படி ஒரு திங்கள் தேர்தல் கூத்து நடந்தது, முடிவில் வெற்றித்திரு எதிரியை நாடிவிட்டாள். எனினும் அப்பா அவர்கள் அத்தோல்வி யின் அடிப்படையிலேயே என்றென்றும் தம் பெயர் நிலைக்கும் அறப்பணியைச் சிறக்கச் செய்துவிட்டார் எனன லாம். இன்று தமிழ் நாட்டில் வாலாஜாபாத் என்றால் இந்துமத பாடசாலை கூடவே நினைவுக்கு வரும். இன்று சுமார் எழுநூறு பிள்ளைகளுக்கு உணவும் உடையும் உறையுளும் கொடுத்துக் கல்வியைப் புகட்டும் அப்பள்ளியைக் காண்பவர் வியப்புறுவர். நானும் அங்கு செல்லும் போதெல்லாம் அந்தத் தேர்தல் திருப்பு மையமல்லவா, இன்று இத்தனை வேலைகளைச் செய்திருக்கின்றது என்று நினைத்து மகிழ்வேன். தோல்வியால் தொண்டினை வளர்த்த அந்தத் தேர்தல் விந்தை உண்மையிலேயே ஒரு விந்தை அல்லவா! 16. சென்னையில் நாடகம் நான் வாலாஜாபாத்தில் எட்டாவது படித்துக் கொண்டி ருந்தேன். அப்போது சென்னையில் அகில இத்திய காங்கிரஸ் மகாசபை நடந்தது. 1927 டிசம்பர் என நினைக்கிறேன்.